ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை - தேசிய மட்ட அடைவுகள் (விபரம் இணைப்பு)
(tn) ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் தோற்றிய 3 இலட் சத்து 22 ஆயிரத்து 455 மாணவர்களுள் 2 இலட்சத்து 23 ஆயிரத்து 908 மாணவர்கள் 70 க்கும் மேற்பட்ட புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்துள்ளதாக கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இது சுமார் 70 வீத சித்தி என்று தெரிவித்த அமைச்சர், 32,607 மாணவர்களே புலமைப் பரிசிலுக்கான வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளனர் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
நடந்து முடிந்த 5 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகள் குறித்து நேற்று செய்தியாளர் மாநாடொன்று கல்வி அமைச்சில் நடைபெற்றது.
இதன் போதே அமைச்சர் பந்துல குணவர்தனவுடன் பரீட்சை ஆணையாளர் புஷ்பகுமாரவும் கலந்துகொண்டு தரவுகளைத் தெரிவித்தனர். கிடைத்துள்ள பெறுபேறுகளின் படி அகில இலங்கை ரீதியில் முதல் நான்கு இடங்களைப் பெற்றுள்ளவர்கள் 19 பேர் பட்டியலிடப்பட்டுள்ளனர். 198 புள்ளிகளைப் பெற்ற ஒரே ஒரு மாணவன் காலியில் முதலாவது இடத்தைப் பெற்றுள்ளார்.
194 புள்ளிகளைப் பெற்ற மாணவர்கள் 4வது ஆவதாக 10 பேர் தெரிவாகியுள்ளனர். அகில இலங்கை ரீதியில் 4 இடத்தையும் பட்டியலில் 19 ஆவது இடத்தையும் யாழ். சுன்னாகம் (ஏழாலை) சைவ சன்மார்க்க வித்தியாலய மாணவன் தனுராஜ் பிடித்துள்ளார். 19 பேருள் இவர் ஒருவரே தமிழ் மாணவராவார்.
2012 ஆம் ஆண்டு 3,10,329 மாணவர்கள் தோற்றியிருந்தனர். இவர்களில் 33,383 பேரே வெட்டுப்புள்ளிக்கு மேல் புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்திருந்தனர். இவ்வருடம் தோற்றிய 3,22,455 மாணவர்களில் 32,617 பேர் மட்டுமே வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்துள்ளனர்.
வடக்கில் தோற்றிய 17,591 மாணவர்களில் 1938 பேர் மட்டுமே வெட்டுப் புள்ளிக்கு மேல் புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்துள்ளனர். வடமேல் மாகாணத்திலேயே அதிகளவு மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர். இங்கு தோற்றிய 37,709 மாணவர்களுள் 28,641 மாணவர்கள் வெட்டுப் புள்ளிக்கு மேல் புள்ளிகளைப் பெற்று சித்தி யடைந்துள்ளனர்.
கிழக்கு மாகாணத்தில் தோற்றிய 27,815 மாணவர்களில் 16,052 மாணவர்கள் மட்டுமே வெட்டுப் புள்ளிக்கு மேல் புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்து ள்ளனர். பரீட்சைக்குத் தோற்றிய 3,22,455 பேருள் 82,547 மாணவர்கள் 70 புள்ளிகளையும் பெறாமல் சித்தியடையவில்லை என்றும் தரவுகள் காண்பிக்கின்றன.
நடந்து முடிந்த புலமைப்பரிசில் பரீட்சையில் தேசிய மட்டத்தில் முதலிடம் பெற்ற காலி மஹிந்த கல்லூரி மாணவன் சந்தரு தத்சர பலஹேவாவுக்கு அமெரிக்காவின் ‘டிஸ்னிலான்ட்’ கல்விச் சுற்றுலா சென்று வர வாய்ப்பு வழங்க தீர்மா னித்துள்ளதாக தென் மாகாண கல்வி அமைச்சர் சந்திம ராசபுத்ர தெரிவித்தார்.
198 புள்ளிகள் பெற்ற மாணவன் சந்தரு பலஹேவாவை காலி மஹிந்த கல்லூரிக்குச் சென்று சந்தித்து வாழ்த்துத்தெரிவித்த அமைச்சர், பாடசாலை அதிபர், வகுப்பாசிரியை ஆகியோருக்கும் தமது வாழ்த்துக்களை தெரிவித்தார்.
தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும் தென் மாகாணம் புலமைப்பரிசில் பரீட்சையில் முதலிடத்தை பெற்றது குறித்து பெருமையடைவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். வெட்டுப்புள்ளியை விட கூடுதல் புள்ளி பெற்றவர்கள் சித்தி பெற்றாலும் ஏனைய மாணவர்கள் திறமையற்றவர்கள் என்று கருத முடியாது என்றும் குறிப்பிட்டார்.
குறித்த மாணவனுக்கு 2 வாரங்கள் டிஸ்னிலாந்திற்கு சென்று வர சந்தர்ப்பம் வழங்கப்பட உள்ளது.

Dear Education Minister,
ReplyDeleteI would like to bring to your kind attention, the grade 5 scholarship exam instructor /teacher should not take from same area or same religious because most of the teachers supporting to student, if you want real talent student at least putt the auditor for Muslim and Tamil area one Sinhilis and Singala area putt one tamil or muslim person, then see the result,
Please, select the real talent student, if you want find real talent one, please do this
because I am sure when I written in O/L exam in one Tamil School what they had done for their coumunity students.
Thanks
This comment has been removed by the author.
ReplyDelete