"சுவர்க்கத்தின் திறவுகோல் தொழுகை" மாலைதீவில் இஸ்லாமிய மார்க்க சொற்பொழிவு
(முஹம்மத் ஜதீர்)
அஸ்ஸலாமு அலைக்கும்
அஸ்ஸலாமு அலைக்கும்
"சுவர்க்கத்தின் திறவுகோல் தொழுகை" மாலைதீவில் மாபெரும் இஸ்லாமிய மார்க்க சொற்பொழிவு
மாலைதீவு வாழ் இலங்கை முஸ்லிம்களால் மாலைதீவு வாழ் தமிழ் பேசும் இலங்கை மற்றும் இந்திய முஸ்லிம் சகோதரர்களுக்காக வேண்டி ஏற்ப்பாடு செய்யப்பட்டிருக்கும் மௌலவி அப்துல் பாசித் அல்புஹாரி (இந்தியா) அவர்களின் மாபெரும் இஸ்லாமிய மார்க்க சொற்பொழிவு இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 03-10-2013 மற்றும் 04-10-2013 ஆகிய தினங்களில் நடைபெறவுள்ளது.
இன்ஷா அல்லாஹ் எதிர் வரும் 03-10-2013 வியாழன் இரவு 9:00 மணிக்கு " சுவர்க்கத்தின் திறவுகோல் தொழுகை" என்ற தலைப்பிலும் மற்றும் மறுநாள் அதாவது 04-10-2013 வெள்ளி இரவு 9:00 மணிக்கு "மறுமை நாளின் அடையாளம்" என்ற தலைப்பில் இந்தியாவை சேர்ந்த மௌலவி அப்துல் பாசித் அல்புஹாரி அவர்கள் சொற்பொழிவாற்றவுள்ளார்.
ஆகவே இலங்கை மற்றும் இந்தியாவை சேர்ந்த ஆண்கள் பெண்கள் அனைவரும் இந்த சொற்பொழிவில் கலந்து பயன் பெற்று கொள்ளுமாறு ஏற்பாட்டு குழு அன்புடன் அழைக்கின்றது.
இடம் : ARABIYYA SCHOOL, CHANDANI MAGU, MALE, MALDIVES
:(IN FRONT OF AMINIYYA SCHOOL)
பெண்களின் நலன் கருதி பிரத்தியேக இட வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஏற்பாடு:EXPATRIATE MUSLIM COMMUNITY IN MALDIVES

Post a Comment