கல்முனை நிதாஉல் பிர் குர்ஆன் மத்ரஸா மாணவர்களின் தாய்மார்களுடனான சந்திப்பும், பயான் நிகழச்சியும்
(ஏ.பி.எம்.அஸ்ஹர்)
கல்முனை நிதாஉல் பிர் குர்ஆன் பெண்கள் மத்ரஸா மாணவர்களின் தாய்மார்களுடனான சந்திப்பும் விசேட பயான் நிகழச்சியும் இன்று 2013.10.13 நடைபெற்றது.
அஸர்த்தொழூகையைத்தொடர்ந்து நிதாஉல் பிர் அமைப்பின் மகளிர் அணித்தலைவி ஹாஜியானி முஜீபா அமீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் நிதாஉல் பிர் குர்ஆன் மத்ரஸாவின் அதிபர் மௌலவி அலி ஜின்னா தப்லீகி அரபா தினம் மற்றும் ஹஜ்ஜீப்பெருநாள் தொடர்பாக விசேட உரையாற்றினார்.
இவரது உரையிலிருந்து கேட்கப்பட்ட கேள்விக்கு சரியான விடையளித்த மாணவிகளிலிருந்து தெரிவு செய்யப்பட்ட அதிஸ்டசாலியான மாணவியொருவருக்கு பெறுமதியான பரிசொன்றும் வழங்கிவைக்கப்பட்டது.
இதில் நிதாஉல் பிர் அமைப்பின் ஸ்தாபகர் அல்ஹாஜ் இஸட்.எம்.அமீன். மத்ரஸா முஅல்லிமாக்களான ஏ.எம்.எப்.சஜீஹா எஸ்.கே.எப்.சப்ரின் எஸ்.எஸ்.சல்மா எஸ்.ஏ.சி.ஜாமிஆ.எஸ்.எல்.எஸ்.சுமைய்யா உட்பட பலர் கலந்துகொண்டனர்.


Post a Comment