Header Ads



ஊடகவியலாளர்கள் திருந்துவதற்கு சந்தர்ப்பம் வழங்குகிறேன் - மேர்வின் சில்வா

(அதெத) 

இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்களில் நியாயமான நடுநிலையான செய்திகளை வெளியிடும் ஊடகவியாலாளர்களுக்கு தான் தலைவணங்கி மரியாதை செலுத்துவதாக ​பொதுசன மற்றும் பொது மக்கள் தொடர்பு அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்தார். 

வத்தளை - கொங்கிதொட பிரதேசத்தில் இன்று (03) நடைபெற்ற பாடசாலை சிறுவர்களுக்கு காலணிகளை வழங்கும் நிகழ்வில் உரையாற்றிய அவர் இதனை கூறினார். 

கோபத்தை மனதில் வைத்து கொண்டு சண்டித்தனம் செய்யும் ஊடகவியலாளர்களுக்கு அன்பு செலுத்துவதாகவும் அவர்கள் திருந்துவதற்கு சந்தர்ப்பம் வழங்குவதாகவும் மேர்வின் தெரிவித்துள்ளார். 

திருத்த முடியாத ஊடகவியலாளர்களை எமது ஆலயத்திற்கு அழைப்பித்து பிக்குகள் மூலம் தர்ம உபதேசம் நடத்த போவதாக அவர் கூறினார். 

அநகாரிக தர்மபால மாத்தறையை சேர்ந்தவர் என்பதால் அவர் இருக்கும் இடத்தை தாண்டியே எனது பெலியத்த பிரதேசத்திற்கு செல்ல வேண்டும். எனது குடும்பத்திற்கும் தர்மபாலவின் குடும்பத்திற்கும் தொடர்புகள் இருந்தன. 

அநகாரிக தர்மபாலவை ´பொட்டணிகாரன்´ என்று பட்டப்பெயர் சூட்டிய நாட்டில் மேர்வின் சில்வா என்ற என் மீது அவதூறுகள் ஏற்படுத்தப்படுவது ஆச்சரியப்படும் விடயமல்ல என அவர் தெரிவித்தார். 

No comments

Powered by Blogger.