Header Ads



வடமாகாண அமைச்சர் தெரிவில் இழுபறி - அமைச்சர் பதவிக்காக விண்ணப்பங்கள் கோரல்

(tm) வடமாகாண அமைச்சர் தெரிவில் இழுபறி நிலவுவதால், அமைச்சர் பதவிக்கான விண்ணப்பங்களை தருமாறு தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் உயர்மட்டங்களுக்கிடையிலான கலந்துரையாடல் புதன்கிழமை (2) இரவு கொழும்பிலுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அலுவலகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தின் போது, அமைச்சர்களை நியமிப்பது குறித்து ஆராயப்பட்ட வேளையில், இலங்கை தமிழரசு கட்சி முக்கிய அமைச்சுக்களான கல்வி மற்றும் சுகாதார அமைச்சுக்களை தருமாறு தலைவரிடம் கோரிக்கை விடுத்திருந்தது.

இக்கோரிக்கைகளை ஏனைய கட்சி தலைவர்கள் ஏற்க மறுத்ததைத் தொடர்ந்து, அமைச்சுப் பதவிகளை கோருபவர்கள் தமக்கான விண்ணப்பப் படிவங்களை தருமாறு உறுப்பினர்களுக்கு இரா.சம்பந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை, அமைச்சர் தெரிவு குறித்த கலந்துரையாடலை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நாளை வெள்ளிக்கிழமை வரை ஒத்திவைத்துள்ளார்.

No comments

Powered by Blogger.