முஸ்லிம் ஆசிரியரின் வீட்டில் முளைத்த புத்தர் சிலை (படங்கள்)
வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவில் தென்னந்தோட்டம் ஒன்றில் தோட்ட உரிமையாளரின் அனுமதியின்றி வாழைச்சேனை ஸ்ரீ புத்தி ஜயந்தி விகாரையின் விகாராதிபதியால் புத்தர் சிலை ஒன்று (08.10.2013) வைக்கப்பட்டள்ளது.
வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவில் கும்புருமூலை கிராம சேவகர் பிரிவில் பாசிக்குடா வீதியில் அமைந்துள்ள தென்னந்தோட்டம் வாழைச்சேனையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியரான ஹயாத்து முகம்மது முஹம்மது இப்றாகிம் என்பவருக்குச் சொந்தமானதாகும் இவரது காணிக்குள் அத்துமீறி நுளைந்த வாழைச்சேனை ஸ்ரீ புத்த ஜயந்தி விகாரையின் விகாராதிபதி புத்தர் சிலையை வைத்துள்ளார் என்று கல்குடா பொலிஸ் நிலையத்தில் தான் முறைப்பாடு செய்துள்ளதாக ஹயாத்து முகம்மது முஹம்மது இப்றாகிம் தெரிவித்தார்.
பிரித்தானிய ஆட்சியில் லெப்பைத் தம்பி ஹாஜியார் என்பவரினால் கொள்வனவு செய்யப்பட்ட இக் காணி பின்னர் அவரது மருமகனான ஹயாத்து முகம்மது முஹம்மது இப்றாகிம் என்பவருக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட காணியே காணி என்பது குறிப்பிடத்தக்கது.
வாழைச்சேனை பிறைந்துரைச்சேனை பாடசாலை விளையாட்டு மைதானத்தில் வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலை அகற்றப்பட்டு பாடசாலை மாணவர்கள் விளையாடுவதற்கு நேற்று அனுமதித்த நிலையிலயே இவ் புத்தர் சிலை தென்னந்தோட்டத்தில் வைக்கப்பட்டுள்ளது.





மதத் தலைவர்களே இப்படியாக இருந்தால், இவர்கள் போதிக்கும் புத்த மதம் பற்றி மக்கள் எப்படி நினைப்பர்????? இஸ்லாம் கூறுவதைப் பாருங்கள்: பிறர் நிலத்தில் ஒரு சாணை அபகரித்தாலும் மறுமையில் அது ஏழு வானம் வரை எடுக்கப்பட்டு மாலையாக அணிவிக்கப்படும்.
ReplyDelete