'கிழக்கு மாகாண மக்களின் நிம்மதியான வாழ்வுக்கு வழிவகுத்தவர் அமைச்சர் அதாவுல்லாதான்'
(எம்.எம்.ஏ.ஸமட்)
கிழக்கு மாகாணத்தில் வாழும்; மூவின் மக்களும் சேவைகளைப் இலகுவாகப் பெற்றுக்கொள்ளவதற்காகவே மாகாணத்தின் நிர்வாகக் கட்டமைப்பு மட்டக்களப்புக்கு விஸ்தரிக்கப்படுகிறது. இவ்வாறு கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை தெரிவித்தார்.
கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி பணிகளை மக்களின் பயன்பாட்டுக்கு ஒப்படைக்கும் வைபவங்களின் ஓர் அங்கமாக இன்று (28.10.2013) நடைபெற்ற கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் மாகாணப்பணிப்பாளர் புதிய கட்டடத் தொகுதி திறப்பு விழாவில்; கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
ஜனாதிபதியின் வழிகாட்டலின் கீழ் இன, மத, மொழி, பிரதேச வேறுபாடுகளுக்கப்பால் கிழக்கு மாகாணத்தில் வாழும் பல்லின மக்களும் பயன்பெறும் வகையில் பல்வேறு வரலாற்று முக்கியத்துவமிக்க அபிவிருத்திப் பணிகள் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சினால் கிழக்கின் சகல மாவட்டங்களிலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கிழக்கு மாகாணத்தின் மையப் பிரதேசமாக மட்டக்களப்பு விளங்குகிறது. இதன் நிமித்தம், கிழக்கு மாகாணத்தின் நிர்வாகக் கட்டமைப்புக்களை மட்டக்களப்புக்கு விஸ்தரிக்க திட்டமிட்டுள்ளோம். ஏனெனில் திருகோண மலை முதல் பொத்துவில் வரை வாழுகின்றன மக்களுக்கு மட்டக்களப்புக்கு மாவட்டத்திற்கு போக்குவரத்து செய்வது இலகுவாகும்.
திருகோணமலையில் சகல நிர்வாகக் கூறுகளும் அமைந்துள்ளதனால் தங்களது பணிகளை மக்கள் நிறைவு செய்வதற்கு பெரும் சிரமம் கொள்கிறார்கள். அதன்காரணமாகவே இந்நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கிழக்கு மாகாணத்தின் ஏனை அமைச்சுக்களின் மக்கள் பயன்பாட்டுக்கான காரியாலயங்களை மட்டக்களப்புக்கு விஸ்தரிக்க ஏனைய மாகாண அமைச்சர்கள் நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புகின்றேன் என்றார்.
30 வருட கால யுத்தத்தின் பின்னர் இந்த மாகாணத்தில் வாழும் மக்கள் நிம்மதியாக வாழ்கிறார்கள். குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழும் மக்கள் பெரும் இன்னல்களைச் சந்தித்தவர்கள். அபிவிருத்தியின் வாசத்தை கடந்த 30 வருடகாலமாக அனுபவிக்காதவர்கள் அமைதிச் சூழலில் வாழும் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை விருத்தி செய்வதற்கு போக்குவரத்துக்கான பொறுத்தமான பாதைகள் இன்றியமையாததாகவுள்ளது.
அவற்றைக் கருத்திற்கொண்டு கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சு 310 மில்லியன் ரூபா நிதியில் வலையிறவு மற்றும் ஆயித்திய மலை பிரதேசங்களின் பிரதான வீதியினை அபிவிருத்தி செய்து, இரு பாலங்களையும் நிறுவி மக்களின் பயன்பாடுக்காக கையளித்துள்ளது.
அதுமாத்திரமின்றி, கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் மாகாணப்பணிப்பாளர் புதிய கட்டடத் தொகுதி மற்றும், மட்டு. மாவட்ட வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் பிரதம பொறியியலாளர் காரியாலயம் என்பவற்றையும் நிர்மாணித்து இவ்விரு காரியாலங்;களினூடாகவும் மக்கள் தங்கள் தேவைகளை திருகோணமலைக்குச் செல்லாமல் நிறைவுசெய்து கொள்வதற்கு வழி ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
அத்துடன், கிழக்கு மாகாண மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும் என்பதற்காகவே அமைச்சர் அதாவுல்லா கிழக்கு பிரிக்கப்பட வேண்டும் என்று குரல் கொடுத்தார். அவர் அன்று தீர்க்கதரிசனமாகச் சிந்தித்தன் விளைவாக இன்று கிழக்கு மாகாண மக்கள் நிம்தியாக வாழும் நிலை உருவாகியுள்ளது.
அதனால் கிழக்கு மாகாண மக்களின் நிம்மதியான வாழ்வுக்கு வழிவகுத்தவர் அமைச்சர் அதாவுல்லா என்று கூறுவதில் ஆனந்தமடைவதாகக் தெரிவித்த அவர், இம்மாகாணத்தின் முதல் முதலமைச்சர் சிவநேசத்துறை சந்திரகாந்தன் மட்டக்களப்பு மாவட்டதின் பல பிரதேசங்களிலும் பல்வேறு அபிவிருத்திப் பணிகளை புரிந்திருக்கிறார் என்பதை ஞாபகமூட்டுவதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்

Post a Comment