கல்முனை அஸ்ரப் வைத்தியசாலையில் இலவச மூக்குக் கண்ணாடி வழங்கும் நிகழ்வு
உலக பார்வை தினத்தை முன்னிட்டு 'உங்கள் கண்களை பரிசோதித்துக் கொள்ளுங்கள்' எனும் தொனிப் பொருளில் பொதுமக்களை விழிப்பூட்டும் கருத்தரங்கும் இலவச மூக்குக் கண்ணாடி வழங்கும் நிகழ்வும் கல்முனை அஸ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் இன்று (2013-10-10) இடம்பெற்றது.
வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஏ.எல்;.எம்.நஸீர் தலைமையில் நடைபெற்ற இக்கருத்தரங்கில் பார்வையின் முக்கியத்துவம், கண்களை பாதுகாத்தல், கண்களில் ஏற்படும் தாக்கங்கள் பற்றிய விரிவுரையினை வைத்திய நிபுணர் டாக்டர் எம்.எம்.ஏ.ஏ.றிசாத் நிகழ்த்தினார்.
இதன்போது பொதுமக்களுக்கு கண் பரிசோhனை மேற்கொள்ளப்பட்டு இலவசமாக மூக்குக் கண்ணாடியும் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் டாக்டர் வை.எல்.எம்.யூசுப் மற்றும் வைத்தியர்கள், தாதிய உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.




Post a Comment