பொத்துவிலின் முதல் வாத்தியார் (மர்ஹும் ஜ.எல்.மீராலெவ்வை)
(பொத்துவில் றம்சான்)
எமது பொத்துவில் கிராமமானது கல்வியில் பின்தங்கிய நிலையிலேயே ஆரம்ப காலத்தில் இருந்து காணப்பட்டது அந் நிலையில் இறைவனின் அருடகொடையினால் பொத்துவிலின் கல்வி வளர்ச்சிக்கு அடித்தளமிட்டு இந்த கிராமத்துக்கு சிறந்த வழிகாட்டியாயும் பொத்துவிலின் முதலாவது வாத்தியாராகவும் விளங்கியவர்தான் இந்த இஸ்மாலொவ்வை முஹம்மது மீராலெவ்பை ஆவார்.
இவர் இஸ்மாலெவ்வை அவர்களினதும் சின்னம்மா அவர்களினதும் புதல்வராக 1867.07.14.ம் ஆண்டு இந்த பொத்துவில் மண்ணில் பிறந்தார் இவர் தனது பெற்றோர்களிடமிருந்து சிறந்த அன்பையும் அறிவையும் பெற்றுக் கொண்டார் பெற்றுக் கொண்டது மட்டுமல்லாமல் அதை தனது வாழ்கையிலும் செயற்படுத்துபவராகவும் இருந்தார் இவர் தனது கல்வியை பொத்துவில் மெதடிஸ்த மிஸன் தமிழ் கலவன் பாடசாலையில் 05ம் வகுப்புவரை பெற்றுக் கொண்டார்.
06ம் வகுப்புப் படிப்பினை கல்முனை வெஸ்லி பாடசாலையில் தொடர்ந்தார் ஆனால் தாயின் மரணத்தை அடுத்து மேற்படிப்பை நிறுத்திக் கொண்டார் அக்கால வழக்கப்படி 05ம் வகுப்புப் படித்து சித்தி அடைந்தால் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசாங்க உத்தியோகத்தராக நியமணம் பெற்று விடுவார்கள் அந்த வகையில் ஜ.எல்.முஹம்மது மீராலெவ்வை அரசாங்கத்தினால் ஆசிரியர் நியமணம் பொற்றார் இவர் ஆரம்பக்கல்வியை பெற்ற பாடசாலையிலேயெ தனது ஆசிரியர் தொழிலை ஆரம்பித்தார்
ஆரம்பித்து நீண்ட காலமாக கல்விப்பணி செய்தார் அக்கால கட்டத்தில் பயிற்சிப்புத்தகங்கள் கொண்டுவராத பிள்ளைகளுக்கு நிலத்தில் மண்கூட்டி மண்ணில் தமிழ் அரிச்சுவடியை விரல்கலின் உதவியால் எழதப்பழக்கி பொத்துவிலின் சிறந்த தலைவர்களை உருவாக்கியவர்தான் இந்த வாத்தியார் இவ்வாறு பல துறைகளிலும் சேவைகளைச் செய்து கொண்டிருந்தார்
இவருக்கும் இவரின் துனைவியார் ஆசியத்தும்மாவிற்கும் இறைவன் 07பிள்ளைகளைக் கொடுத்தான் 05 ஆண்களும் 02 பெண்களும் அவர்களுக்குப் பிறந்தனர் இதில் முதலாவது பிள்ளை மீராலெவ்வை நாகூர்வீவி 1933ம் ஆண்டில் பிறந்தார் அக்கால கட்டத்தில் பெண்கல்வி மறுக்கப்பட்டிருந்த போதிலும் தனது ழூத்;த மகளான நாகூர் வீவியை 05ம் தரம் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்றதைத் தொடர்ந்து பொத்துவில் மெதடிஸ்த மிஸன் பாடசாலையில் இருந்து மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் கல்லுரியில் மேற்படிப்பைத்தொடர்ந்து பரீட்சைகளில் சிறந்த சித்திகளைப் பெற்று பயிற்றப்பட்ட ஆசிரியராகவும் சிறப்பான அதிபராகவும் பல இடங்களில் கடமையாற்றி 2001.01.09ம் திகதி மரணமடைந்தார்.
பெண்மகளைப் படிக்க வெளியூருக்கு அனுப்பி வைத்தது அப்போதைய சூழலில் வீட்டிற்கும் சமுகத்திற்கும் பெறும் இழப்பாகவே இருந்தது ஆனால் அதன் பயனைக் கண்முன்னே கண்டு பேருவகை அடைந்த பெரியவர்தான் இந்த மீராலெவ்வைப் புலவர்
மீராலெவ்வை அப்துல் கபூர் 'யுவன்' என்ற புனைப்;பெயரில் நடித்துப் புகழ் பெற்றவர் இவரது இரண்டாவது பிள்ளையாவார.; இவரும் பொத்துவில் மெதஸ்த மிஸன் பாடசாலையிலும் 05ம் வகுப்புப் புலமைப்பரிசில் பரிட்சையில் சிரப்பாகச் சித்தியடைந்த காரணத்தால் மட் மெதடிஸ் கல்லுரியில் ஆங்கில மொழியில் தனது மேற்படிப்பினைத் தொடர்ந்தார் ஆங்கில உதவி ஆசிரியராக நியமனம் பெற்ற இவர் தொடர்ந்தும் கற்ற போதும் விதியின் படி அவர் கற்பனை பண்ணிய இடத்தைப் பிடிக்க முடியாது. போய்விடவே சுகாதாரத்திணைக்களத்தின் கீழ் நிருவாக அதிகாரியாகப் பல இடங்களில் கடமையாற்றினான் இவர் 1991இல் இறையடி சேர்ந்தார்.
இவரது முன்றாவது மகன் சம்சுல் ஆரிபீன் கம்பீரமான தோற்றத்தைக் கொண்ட இவர் கிராம சேவை உத்தியோகத்தராகச் சேவையாற்றினார் இனிமையாகப் பாடும்யியல்புலள்ள இவர் தனது 35 ஆவது வயதில் இறையடி சேர்ந்தார். நான்காவது பிள்ளையான சபீயுல் நபீன் பொத்துவில் மத்திய கல்லூரியில் நீண்ட காலமாக அலுவலக உதவியாளராக இருந்து 2000 ஆம் ஆண்டு மரணித்தார். அப்துல் றசீது இவரின் ஐந்தாவது பிள்ளையாவார். இவர் கணக்காளராக பொத்துவில் பல நோக்குக் கூட்டுரவுச் சங்கத்துல் விஷேட பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார்;
அடுத்து கவிவாணன் அஸீஸ் என்ற புனைப்பெயரீல்; மரபுக் கவிதை எழுதுவதில் புகழ் பெற்ற அப்துல் அஸீஸ் இவரது ஆராவது பிள்ளையாவார்;. ஆசிரியராகவும். அதிபராகவும் பிரதேசக் கல்வி பணிப்பாளராகவும் பணியாற்றிய இவர் 2002.03.17 ந்திகதி இறையடி சேர்ந்தார். 07வது கடைசியுமான பிள்ளையுமான மகள் எம்.எல்.சல்மா வீவி ஆசிரியராகவும் பணியாற்றினார்கள் அனைத்து பிள்ளைகளையும் அல்லாஹ்வின் அருளால் சிறந்த கல்விமான்களாக மீராலெவ்வை வாத்தியார் அவர்கள் மாற்றினார்கள்
இப்படிப்பட்ட இவர் நீண்ட காலமாக ஆசிரியர் பதவியை வகித்து இக்கிராமத்தவர்களுக்கு கல்வி அறிவுட்டினார் இதன் விளைவாக பொத்துவிலின் மக்கள் அனைவராலும் அன்று முதல் இன்று வரைக்கும் அறியப்பட்டு பேசப்படக் கூடியவராக இருக்கிறார் இவர் கற்றதனால் பெற்ற பயனை இந்த ஊரே பெறவேண்டும் என்ற எண்ணத்தில் சமூகத்திற்கு சிறப்புத் தொண்டாற்றினார்.
இப்படிப் பொத்துவிலில் அறிவிளிகளாய் கிடந்த மக்களை அல்லாஹ்வின் உதவியுடன் அறிவாளிகளாக மாற்றிய இந்த பொத்துவில் மீராலெவ்வை வாத்தியார் ஊரில் நல்ல பல பிரஜைகளை உருவாக்கியவர் என்றும் நினைவூட்டக்கூடியவர் தனது ஆசிரியர் தொழிலை நீண்ட கால சேவையின் பின்னரும் சுய விருப்பத்தின் பேரிலும் இராஜினாமா செய்தார். இந்நிகழ்வு அவரின் குடும்பத்தினருக்கு பேரிழப்பாகவே இருந்தது.
இந்த மீராலெவ்வை வாத்தியார் அவர்கள் தம்மோடு இணக்கமாக நடந்து கொண்டவர்களுக்கு மிகவும் நன்றியுடையவராக இருந்தார் அந்த வகையில் மட்டக்களப்பைச் சேர்ந்த சின்னலெவ்வை வன்னியனார் பொத்துவிலுக்கு வன்னியராக கடமையாற்றி வந்த வேளையில் தனது வளவுகளில் ஒன்றையும் தனக்கு நன்றாக விளைச்சல் கொடுத்துக் கொண்டிருந்த காணியையும் பொத்துவிலில் இருக்கும் போது பாவிப்பதற்காக சின்ன லெவ்வை வன்னியாருக்கு அன்பளிப்பாகக் கொடுத்தார்.
சின்னலெவ்வை வன்னியனார் அவர்கள் ஒரு குறிப்பிட்ட காலம் பொத்துவிலில் சேவை செய்துவிட்டு பொத்துவிலை விட்டுச் செல்லும் போது மேற்குறித்த வளவினையும் காணியையும் அரசாங்கத்திற்கு எழதிக் கொடுத்துவிட்டுச் சென்றுவிட்டார் அந்த வளவுத்துண்டில்தான் அக் அல்-இர்பான் மகளிர் கல்லுரியின் பழைய விஞ்ஞான ஆய்வுகூடம் தற்போது அமைந்துள்ளது.
1950ம் ஆண்டு காலப்பகுதியில் பொத்துவில் பிரதேசத்தில் மழையின்றி கடும் வரட்சி ஏற்பட்டது அதனால் மனம் வருந்தி வேதனைப்பட்டவராக மிகவும் பிரசித்தி பெற்ற மழைக்காவியம்'' ஒன்றை இயற்றி மேடையேற்றிக் கொண்டு இருக்கையில் பெரும் மழை பெய்து ஊர்மக்களது உள்ளத்தைக் குளிர வைத்ததாக இவரது வீரவரலாற்றைச் சிறப்பாக உள்வாங்கி ஜிரனித்துக் கொண்ட பலர் இன்னும் வாய் ஒயாமல் அது பற்றிக் கதைத்துக் கொண்டு இருக்கிறது என்றால் அது மிகையாகாது இவரது திறமைகள் இவரின் சந்ததிகளினால் அற்புதமாகப் பிரதி பலிப்பது இதற்கான சிறப்புச் சான்றாகும்.
கல்விக்கு உயிர் கொடுத்தோர் மரணிப்பதில்லை என்பது போல் அவரது பரம்பரையில் தோன்றியுள்ள தோன்றவுள்ள இளசுகள் அதற்கு சான்று பகிர்கின்றன பொத்துவில் என்றும் கிராமத்தோட்டத்தில் வானளவு ஓங்கி உயர்ந்த கம்பீரமான விருட்சமே மீராலெவ்வை வாத்தியார் அவர்கள் மீராலெவ்வை வாத்தியார் அவர்கள் தனது மகள் நாகூர் வீவிக்கும் மருமகன் எஸ்.ஏ.எம்.இஸ்மாயில் அவர்களுக்கும் அறிவுரை கூறி எழதிய மடல் இன்றும் சான்றாக உள்ளது.
குர்ஆன் ஓதுவதில் திறமை பெற்ற இவர் அதிகதிகமாக குர்ஆனைத்தானும் ஓதி தன் குகழந்தைகளுக்கும் கற்றுக் கொடுத்தார். மார்க்கப் பற்று மிக்க மீராலெவ்வை வாத்தியார் அவர்கள் சின்னஉல்லை பள்ளிவாயலில் ஸ்தாபகர்களில் ஒருவராய் இருந்தார்
அவரது ஆயுட்காலத்தில் தினமும் 02 அல்லது 03 தடவைகள் நடந்து உல்லைக்குச் சென்று பொத்துவிலுக்கு வருவார்கள்.
அவரது பேரப்பிள்ளைகளான இப்திகார, நதிரா, இஸ்மாயில், ஹபிழா இஸ்மாயில், சியானா, காமிலா, பிர்தௌஸ், நிஹாரா,இக்பால், றயிஸ், சுல்பிகார், சிராஜ், சரீனா, முர்த்தலா, நஸ்ரின், சிறின், ஜெஸ்மின், முபாரக் அலி, பாத்திமா பஃமிதா, தாறிக் ,சாபினாஸ் , சிரோனாஸ், ஸப்ரினாஸ், முஸம்மில், ஷிஃனாஸ் ஆகியவற்றின் அரைப்பகுதி மேலானவர்களுக்கு அன்பாகப்பேசி கதைகள் சொல்லி தனது மறணத்தின் பின்னர் தனக்காக ஒதி துஆ செய்ய வேண்டும் என அன்புக்கட்டளை பிறப்பித்தார் தன் முத்த பேரப்பிள்ளைகளுக்கு பல அறிவுகளை வழங்கினார்.
கபுரில் நியமிக்கப்படும் மலக்குகள் மன்தீனுக மன்ரப்புக மனநபியுக என்பன போன்ற கேள்விகளைக் கேட்பார்கள் ஓதிப்படித்து ஓழங்காக வாழ்ந்து மரணித்தால் தான் இக்கேள்விகளுக்கு விடை சொல்லலாம் என்ற உண்மையை தன் பேரக்குழந்தைகளுக்கு அடிக்கடி நினைவுட்டி இருந்தார்.
அது மட்டும் அல்லாது அறுகம்பைக்கு செல்லும் வீதியில் அமைந்திருக்கும் இவரது சொந்த வதிவிட நிலப்பகுதியினை சட்ட விரோதமாக அபகரிக்க முயன்றவர்களின் சதியை முறியடிப்பதற்கு தன் நிலத்தை பெற்றுத்தறுமாறு நீதி மன்றத்திற்குச் சென்றார். கல்முனை நீதி மன்றத்தில் நீதவான முன்னிலையில் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டது இதில் மீராலெவ்வை வாத்தியாருக்கு எதிராக அவரது நிலத்தினை அபகரிப்பதற்கு இருந்தவர்கள் யாழ்பாணத்தில் பிரபல்யமான மெஸ்மேரிஷம் (MESMERIESM ) எனும் கலையைக் கற்றவருமான ஜி.ஜி.பொன்னம்பலம் என்ற சட்டத்தரணியை இந்த வழக்கில் வாதாடுவதற்காக கொண்டு வந்து கல்முனை நீதவான் மத்தியில் வழக்கு விசாரனை நடந்து கொண்டிருக்கும் பொழது சட்டத்தரணியான ஜி.ஜி.பொன்னம்பலம் மீராலெவ்வை வாத்தியாரைப் பார்த்து, என் முகத்தைப் பார்த்து கதை கானும்'' என்று கூற அதற்குப் பதிலடியாக அப்படியே குற்றவாளிக் கூண்டில் நின்றவாறு 'உம் கதை என் காதில் விழுகின்றது கேள் காணும்'' என்று கூறினாராம்
அந்த தைரியமான பேச்சினால் தனக்கு எதிராக இருந்த வழக்கிலேயே வெற்றி பெற்று வீரநடைபோட்டு வெளிவந்தவர் தான் இந்த மீராலெவ்வை வாத்தியார். தான் எடுக்கும் விடயங்கள் அனைத்திலும் வெற்றிகண்ட பொத்துவிலில் பிறந்து வாழ்ந்த இவர் தனது 111வது வயதில் இந்த பொத்துவில் மண்ணில் இருந்தும் தனது அன்புச்செல்வங்களை விட்டும் தனது ஊர் மானம் காத்தவராய் தன் மானம் காத்தவராய் 1978ம் ஆண்டில் இம் மண்ணில் இறையடி சேர்ந்த அந்தப் பெரியாருக்கு எல்லாம் வல்ல அல்லாஹ் சுவர்க்கத்தைக் கொடுக்க வேண்டும்

awarudaiya perapullaikal listla mussarraf illaye? awarayum serthu kollunkal.
ReplyDeleteபொத்துவில் கல்வியில் பின்தங்கி இருந்த காலத்தில் பிற ஊரில் இருந்து வந்து நீண்ட காலமாக தனது வாழ்க்கையை பொத்துவில் சந்ததிகளுக்காக அர்பநணித்தவர்களில் சாய்ந்தமருது எம். வை. எம் எச். காரியப்பர் ஆசிரியரும் ஆவர்.
ReplyDeleteThanks for your kind leaf
ReplyDelete