இலங்கையிலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு கடத்தப்பட்ட சிறுவர்கள்
(Sfm) சிறார் கடத்தல் தொடர்பான தகவல் ஒன்று தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு கிடைத்துள்ளது.
10, 11 மற்றும் 14 வயதுகளை உடைய ஆண் பிள்ளைகள் அவுஸ்திரேலியாவிலிருந்து மீண்டும் இலங்கைக்கு நாடுகடத்தப்பட்ட போதே இந்த தகவல் வெளியாகியுள்ளதாக அதிகாரசபையின் விசாரணை பிரிவு காவல்துறை அதிகாரி பீ.டபிளியு. போபிடியகொட தெரிவித்துள்ளார்.
சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக அவுஸ்திரேலியாவுக்கு சென்று பின்னர் நாடுகடத்தப்பட்ட சிலர் அண்மையில் தாயகம் திரும்பினர்.
அவர்களுள் குறித்த மூன்று சிறார்களும் இருந்துள்ளனர்.
பின்னர் கட்டுநாயக்க சர்வதேச வானூர்தி தள அதிகாரிகளினால் அவர்கள் சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
சிறார்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது, அவர்கள் யாழ்ப்பாணத்தில் வசித்தவர்கள் என்று தெரியவந்துள்ளது.
பின்னர் சிறார்களின் பெற்றோரை அழைத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், 2 லட்சம் ரூபாவுக்காக ஒரு சிறுவனை கடத்தலை மேற்கொண்டவரிடம் விற்றதாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.
அவர்களை வளர்ப்பதற்காக அவுஸ்திரேலிய வாசிகளிடம் ஒப்படைக்கவுள்ளதாக கடத்தல் காரர் சிறார்களின் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.
மூன்று சிறார்களையும் வானூர்தி ஊடாக அவுஸ்திரேலியாவுக்கு கொண்டு செல்லவுள்ளதாக கடத்தல்காரர், பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.
எனினும், சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாகவே சிறார்கள் அழைத்துச் செல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment