யாழ்ப்பாணத்தில் தொடர்பாடல் தொழிநுட்பத்தை மேம்படுத்த நனசல
(பா.சிகான்)
கிராமிய மக்களின் தொடர்பாடல் தொழிநுட்பத்தை வலுப்படுத்த யாழ் கல்லூரி வீதியில் ஆரம்பிக்கப்பட்ட நனசல ( அறிவகம்) தற்போது திறக்கப்படாது உள்ளது.
கடந்த மாதம் 16 ம் திகதி அவசர அவசரமாக தேர்தல் காலத்தை முன்னிட்டு எவ்வித முன்னேற்பாடுகளுமின்றி அப்பகுதி கிராமிய அபிவிருத்தி சங்கத்தின் ஏற்பாட்டில் தகவல் தொழிநுட்பவியல் அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டியவினால் திறக்கப்பட்டு மக்களிடம் கையளிக்கப்பட்டது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் வழிகாட்டலில் கிராமிய மக்களின் தொடர்பாடல் தொழிநுட்ப வளர்ச்சியை முன்னேற்றும் நோக்குடன் திறக்கப்பட்ட இந்நிலையம் நியமிக்கப்பட்ட அலுவலகர் 6 மாதகால பயிற்சி நெறிக்காக சென்றுள்ளதால் திறக்காது உள்ளதாக அறிய முடிகிறது.
பொதுவாக எந்தவொரு அலுவலகமோ அல்லது நிறுவனமோ ஆரம்பிக்கப்பட முன்னர் அதில் உள்வாங்கப்படும் அலுவலகரோ ,பயிற்சியாளரோ பயிற்சியின் பின்னர் தான் உள்ளீர்க்கப்படுவார்.
ஆனால் இந்நிலையத்திற்கு தெரிவு செய்யப்பட்ட அலுவலகர் தற்போது தான் இதற்கான பயிற்சியில் ஈடுபடுகிறார்.
இவர் பயிற்சி முடித்து வருவதற்குள் இக்கிராமத்தில் உள்ளவர்கள் எங்கு சென்று தொழிநுட்பத்தை பெறுவது,சம காலத்தில் ஏனைய பிரதேசத்தில் ஆரம்பிக்கப்பட்ட நனசல நிறுவனங்கள் சீராக இயங்குகிறது.
தற்போது நாடு முழுவதும்705 மேற்படி நிலையங்கள் இயங்குகிறது.இங்கு இணைய வழி சேவை மற்றும் மின்னஞ்சல் ,ஸ்கேனிங்,கணனிபயிற்சி,போட்டோ கொப்பி,பைண்டிங்,லெமினேடிங் போன்ற சேவைகளை பெற்றுக்கொள்ள முடியும்.
எனவே இவ்வாறான சேவையை பெற இக்கிராம மக்களுக்கு வாய்ப்பு எப்போது கிடைக்கும் என எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Post a Comment