'திவி நெகும' - சரியான முறையில் நடைமுறைப்படுத்தி, பயனடைந்து கொள்ள முயற்சிப்போம்
(Dr. N. Ariff)
மஹிந்த சிந்தனையின் ஒரு நிகழ்ச்சித்திட்டமான மேற்படி திவி நெகும தேசிய வேலைத்திட்டமானது 11. 10. 2013 வெள்ளிக்கிழமையன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. உண்மையில் காலத்தின் தேவையாக இருக்கின்ற ஒரு வேலைத்திட்டமே இது.
சுகாதாரத் திணைக்களத்தின் புள்ளிவிபரங்களின் படி தற்பொழுது உயர் குருதியழுத்தம், நீரிழிவு நோய், கொலஸ்திரோல் மற்றும் புற்றுநோய் போன்ற தொற்றா நோய்களினால் பாதிக்கப்படுகின்றவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு செல்கின்றது. இதற்குரிய முக்கிய காரணங்களாக குறைவான உடலுழைப்பும், செயற்கை முறையினால் தயாரிக்கப்படுகின்ற உணவுகளும், மரக்கறி மற்றும் பழவகைகளை இரசாயன பதார்த்தங்கள் கொண்டு உற்பத்தியாக்குவதும் அமைகின்றன.
எனவே தான், மஹிந்த சிந்தனையின் ஒரு நிகழ்ச்சித்திட்டமான திவி நெகும தேசிய வேலைத்திட்டம் ஒரு வரப்பிரசாதமாக அமைகின்றது. இதனை சரியான முறையில் நடைமுறைப்படுத்தனால், பின்வரும் நான்கு விதங்களில் நன்மை பயக்கும்.
1. உடலுழைப்பு
2. சுயதேவைப்பூர்த்தி
3. வருமானம்
4. ஆரோக்கியமான வாழ்வு
ஒரு சிறிய துண்டு நிலத்திலானாலும் சரி, முடியுமானவர்கள் வீட்டுத் தோட்டம் ஒன்றை உருவாக்குவதன் மூலம், மேற்கூறிய நான்கு பயன்களையும் பெற்றுக்கொள்ளலாம்.
முக்கியமாக பெண்கள் மிதமிஞ்சிய உடற்பருமனினால் பாதிக்கப்படுகின்றார்கள். எனவே, வீட்டுத் தோட்டம் செய்வது குறிப்பாக பெண்களுக்கு மிகவும் நன்மையளிக்கும். தங்களது வீட்டுத் தேவைகளைக் குறைந்த செலவில் பெற்றுக் கொள்வதுடன், மிகுதியானவற்றை விற்பதன் மூலம் வருமானத்தையும் பெற்றுக் கொள்ளலாம். இயற்கையான உணவுகளை உண்பதன் மூலம் தொற்றா நோய்களின் தாக்கத்திலிருந்தும் தங்களைக் காத்துக் கொள்ளலாம்.
எனவே தான், மஹிந்த சிந்தனையின் திவி நெகும தேசிய வேலைத்திட்டம் நான்கு கட்டங்களையும் கடந்து, ஐந்தாவது கட்டத்தை அடைந்துள்ள நிலையிலாவது, அதனை சரியான முறையில் நடைமுறைப்படுத்தி, பயனடைந்து கொள்ள முயற்சிப்போம்.

Post a Comment