"கட்சிக்காக தமது உயிரையும் தியாகம் செய்ய தயாராக இருகின்றோம் - சஜித் பிரமதாஸ
நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளிட்ட ஐக்கியதேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரமதாஸ
கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரமதாஸ தெரிவித்த கருத்து :-
"கட்சிக்காக தமது உயிரையும் தியாகம் செய்ய தயாராக இருகின்றோம் வெளியிலிருந்து வந்தவர்கள் தீர்மானங்களை மேற்கொள்கின்றனர். கட்டைகளால் தாக்கி கட்சியின் தலைவிதியை மாற்ற முயற்சிக்கின்றனர்.
தாக்குதல் நடத்தியவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று எடுக்க வேண்டிய தேவை கட்சிக்கு ஏற்பட்டுள்ளது"
அதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்களுக்கு இடையில் விசேட பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, கட்சியின் முன்னாள் பிரதித் தலைவர்களான சஜித் பிரேமதாச, கரு ஜயசூரிய ஆகியோருக்கு இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது. எதிர்வரும் 15ம் திகதி இந்த பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட உள்ளன.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகம் சிறிகொத்தவில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளது. கட்சியை மீளவும் வெற்றிப்பாதைக்கு இட்டுச் செல்லும் நோக்கில் இந்தப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்படவுள்ளன.
Post a Comment