உலகில் ஆகக் கூடியளவு எழுத்து அறிவில்லாத மக்களாக முஸ்லீம்களே உள்ளனர் - பேராசிரியர் நுஹ்மான்
(அஸ்ரப் ஏ சமத்)
உலகில் ஆகக் கூடிய அளவுக்கு எழுத்து அறிவில்லாத மக்களாக முஸ்லீம்களே உள்ளனர். உலகில் உள்ள முஸ்லீம்களுக்கு இது பாரியதொரு பிரச்சினையாகும். எவ்வாறாயினும் இலங்கை முஸ்லீம்களாகிய நாம் மொழியறிவில் சிறந்த நிலையிலேயே உள்ளோம். வளர்முக நாடுகளின் முஸ்லீம் சனத்தொகையுடன் ஒப்பிடுகையில் எமது கல்விநிலையும் வாசிப்பு அறிவும் உயரிய நிலையில் அமைகின்றது.
நாம் மொழி இன்றி சமுகம் இல்லை. மனித வாழ்வில் மொழி பாரிய பங்கைவகிக்கின்றது. அது சமுக வாழ்வின் முக்கிய அம்சாமாகும். சமுகத்தின் சமுககலாச்சார மேம்பாட்டுக்கு கல்விமுக்கியமாகும். கல்வியானது பிரச்சினைகளை தீர்த்து சிறப்பான வாழ்வை மேற்கொள்ளவேண்டும் என பேராசிரியர் நுஹ்மான் உரையாற்றினார்
இந் நினைவுப்போருரையை கலாநிதி அசிஸ் மன்றம் ஏற்பாடு செய்திருந்தது. இந் நிகழ்வு தெமட்டக்கொட வை.எம்.எம்.ஏ மண்டபத்தில் நடைபெற்றது.
பேராதானை பல்கழைக்கழக முன்னாள் தமிழ்த்துறைத் தலைவர் ; பேராசிரியர் கலாநிதி எம்.ஏ. நுஹ்மான் இவ்வாறு தெரிவித்தார். அறிஞர் கலாநிதி ஏ.எம்.ஏ அசீஸீன் நினைவுப் பேருரை வை.எம்.ஏம்.ஏமண்டபத்தில் மன்றத் தலைவரும் முத்த கல்விமானுமாகிய எஸ்.எச்.எம்.ஜெமீல் தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் அறிஞர் அசீசின் கொழும்புசாகிராக் கல்லூரி பழைய மாணவன் - றத்தினத் தேரர் உரையாற்றினார்
பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வர் உட்பட பல கல்வியலாளர்களும் கலந்துகொண்டனர். சிரேஸ்ட ஊடகவியாளரும் கலாநிதி அசீசின் மாணவனுமான பி.பாலசிங்கம் ஏழுதிய ஏ.எம்.ஏ அசீசிஸ் பற்றிய (Early life and Tributes ) என்ற நூலும் வெளியீட்டுவைக்கப்பட்டது.




Post a Comment