நாட்டுக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் நோக்கில் போலி பிரச்சாரங்கள்
இலங்கைக்கு எதிராக போலிப் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் இளைய மகன் கொலை உள்ளிட்ட பல்வேறு போலிப் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக குற்றம் சுமத்தியுள்ளது. சர்வதேச அரங்கில் நாட்டுக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் நோக்கில் இவ்வாறான பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன என தெரிவித்துள்ளது.
எனினும், நிராயுத பாணியான பின் லேடனை, அமெரிக்க துருப்பினர் ஹெலிகொப்டர் மூலம் சென்று பாகிஸ்தானில் தாக்குதல் நடத்தியிருந்ததாக பாதுகாப்பு அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் எவ்வித குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்படவில்லை என குறிப்பிட்டுள்ளது,
எனினும், இலங்கைப் படையினருக்கு எதிராக பல்வேறு வழிகளில் குற்றச்சாட்டுக்கள் தொடர்ந்து கொண்டே இருப்பதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. எதிர்வரும் பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாட்டை இலக்கு வைத்து மேற்குலக நாட்டு ஊடகங்கள் இலங்கைக்கு எதிரான பிரச்சாரத்தை மேலும் தீவிரப்படுத்தும் என பாதுகாப்பு அமைச்சு எதிர்வு கூறியுள்ளது.

Post a Comment