ஹலாலுக்கு எதிராக என்று கூறி, முஸ்லிம்களுக்கு எதிராகவே செயற்படுகின்றனர் - ஹக்கீம்
(மொஹொமட் ஆஸிக்
ஜே.எம். ஹபீஸ்)
ஜே.எம். ஹபீஸ்)
முஸ்லிம்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு பின்னால் சர்வதேச இயக்கங்கள் சில இருப்பதாக முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதி அமைச்சருமான றவுப் ஹக்கீம் தெரிவித்தார்.
இன்று 2013 10 26 ம் திகதி கண்டியிலுள்ள முஸ்லிம் காங்கிரஸின் மத்திய மாகாண அலுவலகத்தில் இடம் பெற்ற கூட்டம் ஒன்ரில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். மத்திய மாகாண சபையின் முஸ்லிம காங்கிரஸ் உறுப்பினர் உவைஸ் ஹாஜியார் அவர்களது காரியாலயத்தை திறந்து வைத்த பின் இடம் பெற்ற கூட்டத்தின் போதே அவர் இதனை தெரிவித்தார். இங்கு மேலும் உரையாற்றிய அமைச்சர் றவுப் ஹக்கீம்,
இலங்கையின் யுத்தம் முடிவுற்ற பின் தற்போது முஸ்லிம்கள் மத்தியில் சில சிக்கல்களை கட்டவிழ்த்து விடப்பட்டு வருகின்றது. இதில் இவ்வித பிரயோசனமும் இல்லை. ஆனாலும் மக்கள் மத்தியில் இவ்வாறான நெருகக்டிகளை உருவாக்குவதில் சிலர் மும்முரமாக உள்ளனர். எனக்கு தெரிந்த வகையில் இவ்வாரான இயக்கங்களுக்கு பின்னாள் சில் சர்வதேச சக்திகள் செயற்படுகின்றன.
யுத்தம் முடிவடைந்த பின் நாட்டில் அமைதி நிலவுகின்றதை சகிக்காத சில சக்திகள் நாட்டில் மீண்டும் அமைதியின்மையை உருவாக்குவதற்கு இவ்வாரான செயலில் ஈடுபடுகின்றன.
ஹலாலுக்கு எதிராக என்று கூறி முஸ்லிம்களுக்கு எதிராக செயற்படுகின்றனர். நாங்கள் பல நூற்றாண்டுகளாக ஒற்றுமையாக வாழ்கினறோம். எங்கள் மத்தியில் ஏதேனும் சந்தேகங்கள் தோன்றினால் எங்களுக்கு பேசி தீர்த்துக்கொள்ள முடியும் . அதனை விட்டுவிட்டு அதிரடியாக செயற்படுவது கவலைக்குறிய விடயமாகும். இதனால் நாட்டுக்கும் நாட்டின் அரசாங்கத்திற்கும் சர்வதேச மட்டத்தில் அபகீர்த்தி ஏற்படும். பாதுகாப்பு தரப்பு இன் நிலமையை புறிந்து கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜனாதிபதி அவர்களும் இன் நிலையை புறிந்து கொண்டு வெகு விரைவில் இவ்வாரான செயற்பாடுகளுக்கு முற்றிப்புள்ளி வைப்பார் என நாங்கள் நம்புகின்றோம். ஏனென்றால் இவ்வாரான செயற்பாடுகளினால் முஸ்லிம்களது மனம் வெகுவாக நொந்துள்ளது. கடந்த மாகாண சபைத் தேர்த்லின் போது இது நன்றாக பிரதிபளித்தது.
விஹாரைகள் மற்றும் தேவாலயங்களுக்கு சொந்தமான காணிகள் சம்பந்தமான வளக்குகளை விசாரிப்பதற்கு இலங்கையில் முதல் முறையாக பிரத்தியேக மாவட்ட நீதிமன்றம் ஒன்றை உறுவாக்கும் திட்டம் ஒன்றையும் நாம் ஆரம்பித்துள்ளோம். ஏன்றும் கூறினார்.
இங்கு உரையாற்றிய மத்திய மாகாண சபை உறுப்பினர் உவைஸ் ஹாஜியார்,
கடந்த மாகாண சபைத் தேர்தலின்போது முஸ்லிம் காங்னிரஸில் போட்டியிட்டு ஒரு ஆசனத்தை நாங்கள் பெற்றுள்ளோம். இதன் பின் நாங்கள் அனைத்து பேதங்களையும் மறந்து மக்களுக்கு சேவை செய்வதற்காக செயற்படுவோம். கடந்த தேர்தலின் போது கண்டி மாவட்ட மக்கள் அஸாத் சாலிக்கு 55 000 ம் வாக்குகளை கொடுத்து கொழும்புக்கு அனுப்பினார்கள் அவரை சந்திக்க கொழும்புக்கு செல்ல வேண்டும். அவரது ஊடக சந்திப்புகள் கொழும்பிலேயே நடக்கின்றது. அவருக்கு வாக்களித்த மக்கள் இப்போது கவலைப் படுகின்றனர்.அவர்கள் எங்களிடம் வந்து சேருகின்றனர். என்றம் தெரிவிதத்தார்.


முஸ்லிம்களின் தலைவர் அவர்களே... இதுபற்றி ஜனாதிபதி அவர்களிடம் முறையிட்டால் ஏதாவது நடவடிக்கை எடுக்கமாட்டார் என்று நினைத்துத்தான் போகும் போகும் இடங்களில் இப்படி அறிக்கை விடுகிறீர்கள் போலும்....?
ReplyDelete