Header Ads



பௌத்த பிக்குவை தேடும் பொலிஸார்

13 வயதான பாடசாரல மாணவனை கடுமையாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் பௌத்த பிக்கு ஒருவரை தேடி கைதுசெய்வதற்கான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக சிலாபம் மாரவில பொலிஸார் தெரிவித்தனர்.

நாத்தாண்டிய பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் 9 ஆம் தரத்தில் கல்வி கற்று வரும் மாணவனே பௌத்த பிக்குவால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இந்த பிக்கு, மாணவன் பயிலும் பாடசாலையில் ஆசிரியராக பணியாற்றி வருபவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

நடனம் மற்றும் பாடல் போட்டியில் கலந்து கொள்வதற்காக பயிற்சிகளை பெற விகாரைக்கு சென்றிருந்த போதே பிக்கு, மாணவன் மீதான இந்த குற்றத்தை இழைத்துள்ளார்.

சந்தேக நபரான பிக்கு தன்னை அடிக்கடி இவ்வாறு துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக மாணவன் பொலிஸாரிடம் கூறியுள்ளார். இந்த சம்பவம் குறித்து மாரவில பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments

Powered by Blogger.