Header Ads



யாழ்ப்பாண முஸ்லிம் சிறுவர்களுக்கு, தமிழ் கல்வி அதிகாரி இழைத்த அநீதி

(பாறூக் சிகான்)

சர்வதேச சிறுவர் தினத்தில் முஸ்லீம் முன்பள்ளி பாடசாலைகள் யாழ் மாவட்ட பிரபல பாடசாலையொன்றில் இடம்பெற்ற நிகழ்வுகளில் இருந்து புறக்கணிக்கப்பட்ட சம்பவம்  ஒன்று நடைபெற்றுள்ளது.

இச்சம்பவம் கடந்த 1.10.2013 அன்று யாழ் இந்து பெண்கள் கல்லூரியில் மாலை 3 மணிக்கு  சிறுவர் தின நிகழ்வில் நடைபெற்றுள்ளது. இதனால் மாணவர்களை அழைத்துச்சென்ற ஆசிரியர்கள்,பெற்றோரர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக அறியமுடிகிறது.

குறித்த தினத்தன்று யாழ் வலய முன்பள்ளி கல்வி  பணிப்பாளர் ஒருவரினால் யாழ் மாவட்ட முஸ்லீம் பகுதியில்  இயங்கும் அல்-ஹதீஜா முன்பள்ளி ஆசிரியருக்கு தொலைபேசி ஊடாக யாழ் இந்து பெண்கள் கல்லூரியில் நடைபெறவுள்ள சிறுவர் தின நிகழ்விற்கு  வருமாறு திடிரென அழைப்போன்று விடுக்கப்பட்டிருந்தது.

இதன்போது  குறித்த முன்பள்ளி ஆசிரியருக்கு தொலைபேசியில் தொடர்பை ஏற்படுத்திய கல்விப்பணிப்பாளர், யாழ் முஸ்லீம் பகுதியில் உள்ள ஏனைய முன்பள்ளி பாடசாலைகளான இக்ரஹ் மற்றும் அல் அஸ்கர் பாடசாலை மாணவர்களையும் உடன் தங்கள் குறித்த நிகழ்விற்கு அழைத்து வரவேண்டும் எனவும்,சகல மாணவர்களுக்கும் இத்தினத்தில் பரிசு வழங்கப்படவுள்ளது எனவும் தெரிவித்துள்ளர்.

இதனை அடுத்து அல்-ஹதீஜா முன்பள்ளி ஆசிரியர் தனது சக ஏனைய பாடசாலை ஆசிரியர்களிடம்  தகவலை தெரியப்படுத்தியதை அடுத்து அவர்களும் தமது மாணவர்களை நிகழ்ச்சி நடைபெறும் பாடசாலைக்கு  தயார் படுத்தி அழைத்து சென்றுள்ளனர்.

மேலும் சிறுவர் தினமாகையால் மாணவர்களின் பெற்றோர்கள் பலர் ஆர்வத்துடன்  தங்களது வேலைகளை விட்டுவிட்டு தமது பிள்ளைகளின் நிகழ்வுகளை பார்க்கவேண்டும் என்ற ஆசையில் சுமார் 2 கி.மீ தூரத்தில் உள்ள பாடசாலைக்கு  அதிகளவு செலவு  செய்து அழைத்து சென்றனர்.

ஆனால் கல்வி வலயத்தினால் ஏனைய பாடசாலைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டடிருந்த போக்குவரத்து ஒழுங்குகள் கூட இவர்களுக்கு செய்யப்படவில்லை என்பதும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

நிகழ்ச்சி நடக்கும் இடத்தினை அடைந்த 3 முஸ்லீம் முன்பள்ளி பாடசாலைகள் அவ்விடத்திற்கு வந்த வேளை  ஏற்கனவே தொலைபேசியில் தொடர்பு கொண்ட வலய கல்வி முன்பள்ளி பணிப்பாளர் அவர்களுக்குரிய ஒழுங்குகளை செய்து கொடுத்து நடைபெறவுள்ள நிகழ்வில் பங்குபற்ற மாணவர்களை தயார் படுத்துமாறுகூறி அவ்விடத்தில் இருந்து சென்றுவிட்டார்.

சிறுவர் தின நிகழ்வுகள் ஆரம்பமாகி  இடைநடுவில் செல்கையில் முஸ்லீம் முன்பள்ளி மாணவர்கள் தங்கி நின்ற இடத்திற்கு வந்த மற்றுமொரு நல்லூர் கல்வி வலய முன்பள்ளி பணிப்பாளர், இவர் ஒ பெண் என்பதையும் மறந்து முஸ்லீம் முன்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை கூட்டிச்சென்ற பெற்றோர்களை  இந்நிகழ்விற்கு யார் உங்களை அழைத்தது, என கேட்டதுடன் அநாகரீக வார்த்தைகளால் திட்டியுள்ளார்.

இவ்வாறு  பேசிய மேற்படி பெண் பணிப்பாளர் இச்சிறுவர் தின நிகழ்விற்கு உங்களது 3 பாடசாலைகளையும் நாங்கள் அழைக்கவில்லை உடனடியாக இவ்விடத்தை விட்டு நகர வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இதனை சற்றும் எதிர்பாராத முஸ்லீம் முன்பள்ளி ஆசிரியர்கள மற்றும் பெற்றோர்கள்  தங்களது நியாயங்களை எடுத்து கூறிய போதிலும் அப்பணிப்பாளர் அதை ஏற்கவில்லை.

ஏற்கனவே தொலைபேசியில் அறிவித்த முன்கல்வி பணிப்பாளர் தவறுதலாக அழைப்பு விடுத்ததாக கூறியதுடன்  குறித்த சிறுவர் தினத்தில் முஸ்லீம் பாடசாலை மாணவர்களை கலந்துகொள்ள விடாமல் தடுத்து அவ்விடம் விட்டு  விரட்டியுள்ளார்.இதனை அடுத்து மாணவர்களை கூட்டிச்சென்ற ஆசிரியர்கள்,பெற்றோர்கள் ஏமாற்றமடைந்து மாணவர்களை சிறுவர் தினத்தில் இப்படி அழைத்துவிட்டு ஏமாற்றிவிட்டதாக அவ்விடத்தில் இருந்து அகன்று சென்றுவிட்டனர்.

 மாணவர்கள் செல்வதை அவதானித்த ஏற்கனவே அல்-ஹதீஜா முன்பள்ளி ஆசிரியருடன் தொடர்பினை ஏற்படுத்திய முன்பள்ளி பணிப்பாளர் நடந்த தவறுக்காக மன்னிப்பு கேட்பதாகவும், நிகழ்வில் மிஞ்சும் பரிசில்களை முஸ்லீம் பாடசாலைக்கு வழங்க ஏற்பாடு செய்வதாக  அவ்விடத்தில் மாணவர்களுடன் நின்ற பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். கல்விப்பணிப்பாளரின் வேண்டுகொளை ஏற்க மறுத்த பெற்றோர்கள்  மிகவும் ஆத்திரமடைந்த நிலையில், இச்சிறுவர் தினத்தில் தங்களது பிள்ளைகளை புறக்கணித்ததை கண்டு மனவேதனை அடைந்துள்ளனர்.

2 comments:

  1. முஸ்லிம்கள் அமைச்சர்களாக இருக்கும் நிலையில், இவ்வாறு மத துவேசத்தை வெளிக்காட்டியவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ReplyDelete
  2. பிஞ்சு மனமுள்ள பிள்ளைகளுக்கு இனத் துவேஷத்தைக் காட்டியவள் ஒரு பெண்ணாக இருக்க முடியாது, இவள் ஒரு மலடியகத் தான் இருப்பாள். இவள் போன்றவர்கள் இருக்கும் வரை நாட்டில் சமாதனம் காண்பது இயலாத காரியம்.

    ReplyDelete

Powered by Blogger.