அட்டாளைச்சேனை அல்-அர்ஹம் வித்தியாலயத்தில் பாராளுமன்ற தேர்தல்
(ஏ.எல்.ஜனூவர்)
மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்தின் கீழ் பாடசாலையிலுள்ள மாணவர்களின் ஆளுமையும், திறமையும், தலைமைத்துவ பண்புகளையும் வெளிப்படுத்தும் நோக்கமாக கொண்டு கல்வி அமைச்சினால் மாணவர் பாராளுமன்றம் உருவாக்கப்பட்டது.
இதற்கமைவாக மாணவர் பாராளுமன்ற உருப்பினர்கள் தெரிவு செய்வதற்கான தேர்தல் ஒன்று முதன் முதலாக அக்கரைப்பற்று கல்வி வலயத்துக்குற்பட்ட அட்டாளைச்சேனை அல்-அர்ஹம் வித்தியாலயத்தில் இன்று அதிபர் எம்.ஏ.அன்சார் தலைமையில் இடம்பெற்றது.
இத் தேர்தலின்; போது 119 மாணவர்கள் போட்டியிட்டனர். இதில் 65 மாணவர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர். அதிலும் அதிகூடிய வாக்குகளை பெறுபவர்களுக்கு 10 அமைச்சுகளும், 10 பிரதி அமைச்சுகளும் வழங்கப்படவுள்ளன.





Post a Comment