Header Ads



டுபாயிலிருந்து வந்த விமானத்தின் கழிப்பறையில் 9 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கக் கட்டிகள்

வங்கதேசத்தின், தாகா விமான நிலையத்திற்கு வந்த விமானத்தின் கழிப்பறையில், 9 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. வங்கதேச தலைநகர், தாகாவில் உள்ள ஹஜரத் ஷா ஜலால் விமான நிலையத்திற்கு, துபாயில் இருந்து வந்த விமானத்தில், தங்கம் கடத்தப்படுவதாக விமான நிலைய அதிகாரிகளை உளவுத் துறை எச்சரித்தது. 

இதையடுத்து, விமான நிலையத்தில் கடும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. விமானத்தில் இருந்து அனைத்து பயணிகளும் சென்று விட்ட நிலையில், யாரும் பிடிபடவில்லை. 

இந்நிலையில், கழிப்பறையை சுத்தம் செய்பவர், அங்கிருந்து, 32 கிலோ எடையுள்ள, 280 தங்கக் கட்டிகள் இருப்பதாக, அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தார். தங்கக் கட்டிகளை, சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் இந்திய மதிப்பு, 9 கோடி ரூபாய்.

No comments

Powered by Blogger.