Header Ads



விபசாரத்துக்கு 12 மகள்களை விற்ற தாய் கைது

கொலம்பியாவை சேர்ந்தவர் மர்காரிடா டி ஜீசஸ் ஷபாடா மொரேனோ (45). இவளுக்கு 14 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கொலம்பியா தலைநகர் பொகோடோவில் தனது 16 வயது மகளுடன் கைது செய்யப்பட்டாள்.

மகள் கர்ப்பமாக இருந்தாள். தனது வயிற்றில் வளரும் கருவை கலைக்கும்படி தனது தாயும், குழந்தையின் தந்தையும் தன்னை கட்டாயப்படுத்துவதாக அவள் போலீசில் தெரிவித்தாள்.

அதை தொடர்ந்து ஷபாடாவிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போதுதான் பெற்ற 12 மகள்களை கன்னித்தன்மையுடன் இருக்கும் போதே விபசாரத்துக்காக தலா ரூ.12 ஆயிரத்து 500–க்கு விற்று விட்டதாக திடுக்கிடும் தகவலை தெரிவித்தாள்.

12 வயதான போது அவர்களை விபசார புரோக்கர்களிடம் விற்று விட்டதாக தெரிவித்தாள். எனவே பெற்ற மகள்களை விபசாரத்தில் ஈடுபடுத்தியதாக ஷபாடா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவளுக்கு 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனை கிடைக்கும் என சட்ட நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.