9 வயது பாடசாலை மாணவிகளை துஷ்பிரயோகம் செய்த அதிபர் கைது
(Nf) இறக்குவானை, கெந்தேபொல பகுதியிலுள்ள பாடசாலையொன்றின் அதிபர் துஷ்பிரயோக சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
ஒன்பது வயதான இரு மாணவிகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் சந்தேகநபராக அதிபர் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
பாடசாலையில் வேறு மாணவிகள் எவரேனும் இந்த அதிபரால் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்களா? என்பது தொடர்பில் கண்டறிவதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் அதிகாரிகள் வழங்கிய தகவல்களுக்கு அமைய, சந்தேகநபரான 54 வயதான அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரான அதிபரை இறக்குவானை நீதவான் நீதிமன்றத்தில் நாளை ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
.jpg)
சந்தேக நபர் என்று ஏன் சொல்லுவது முகத்தை மறைத்து காட்டுவது பொது மக்கள் பார்வைக்கு முகத்தை காட்டவேண்டும்.எதோ கிரிகட் அடித்து சதம் எடுப்பதுபோல் சிவர் பாலியல் துஸ்பிரயோகம் ஈட்டிக்கு போட்டியாக சிறிலங்காவில் நடக்குது .கடுமையான சட்டத்தை அமுலுக்கு கொண்டுவரவேண்டும்.அறுவது வயசுக்கரனுக்கு இரண்டு வருசம் ஒத்திவைத்த தண்டனை கொடுத்ததால் ஐம்பத்திரண்டு wayasukkaranum .கெடுபிடி இல் இரங்கி இருக்கான் தயவு செய்து இவர்களுக்கள்ளம் மரணதண்டனை கொடுங்கள் .அப்பதான் மற்றவர்கள் பயப்படுவார்கள் .
ReplyDeleteWell Said Musthafa
ReplyDelete