இலங்கை சனத்தொகையில் 7 சதவீதமானவர்கள் முள்ளந்தண்டு சம்பந்தப்பட்ட நோயால் பாதிப்பு
இலங்கை சனத்தொகையில் 7 சதவீதமானவர்கள் அல்லது 14 லட்சம் பேர் முள்ளந்தண்டு சம்பந்தப்பட்ட நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியர் நிஹால் ஜெயதிலக இதனைத் தெரிவித்துள்ளார்.
முள்ளந்தண்டில் பாதிப்பு ஏற்படுவதால், வருடாந்தம் இலங்கையில் 2 ஆயிரம் பேர் மோசமான நிலைக்கு தள்ளப்படுவதகா அவர் தெரிவித்துள்ளார்.
2012ம் ஆண்டு வெளியான உலக சுகாதார ஸ்தாபனத்தின் அறிக்கையின் படி, உலக சனத்தொகையில் 15 சதவீதமானவர்கள் முள்ளந்தண்டு சம்பந்தப்பட்ட நோயால் பாதிக்கப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ministermarukku salariya kuraiththu elaikalukku saththtana food kodukka wendum
ReplyDelete