சிரியாவில் போராளிகளுக்டையே மோதல் - 44 பேர் மரணம்
(tn) சிரியாவின் அலப்போ நகரில் கிளர்ச்சியாளர்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் சுமார் 44 போராளிகள் கொல்லப்பட்டனர்.
அல் கொய்தா அமைப்புடன் தொடர்புபட்ட ஈராக் இஸ்லாமிய தேசம் மற்றும் அரபு மற்றும் மேற்கு நாடுகளின் ஆதரவு பெற்ற சுயாதீன சிரிய படைக்கு இடையில் கடந்த வியாழக்கிழமை ஆரம்பமான மோதல் மூன்று தினங்கள் நீடித்ததாக சிரியா தொடர்பில் கண்காணிப்பில் ஈடுபட்டிருக்கும் பிரிட்டனை மையமாகக் கொண்டு இயங்கும் மனித உரிமை அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
இந்த இரு கிளர்ச்சிக் குழுக்களும் ஜனாதிபதி பஷர் அல் அஸாத் அரசை வீழ்த்த போராடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதில் சிரிய சுயாதீனப் படையின் குறைந்தது. 30 பேராளிகளும் ஈராக் இஸ்லாமிய தேசம் படையின் 14 பேரும் இந்த மோதலில் கொல்லப்பட்டிருப்பதாக கண்காணிப்பாளர் ரமி அப்தல் ரஹ்மான் ஏ.எப்.பி. செய்திச் சேவைக்கு குறிப்பிட்டுள்ளார். நகரின் பல பகுதிகளிலும் மோதல் ஏற்பட்டதாக ரஹ்மான் விபரித்தார்.
.jpg)
Post a Comment