துருக்கி பிரதமருடன் ஹமாஸ் தலைவர் சந்திப்பு - 3 மணித்தியாலம் பேச்சு
துருக்கி பிரதமர் ரிசப்தையிப் எர்டொகன் ஹமாஸ் தலைவர் காலித் மிஷாலை நேற்று முன்தினம் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அன்காராவில் இடம்பெற்ற இந்த சந்திப்பு மூன்று மணி நேரம் நீடித்துள்ளது.
துருக்கி வெளியுறவு அமைச்சர் அஹமட் டவுடொக்லு,தேசிய உளவு அமைப்பின் தலைவர் ஹசன் பிதான் ஆகியோ ரும் காலித் மிஷாலுடனான சந்திப்பில் பங்கேற்றுள்ளனர்.
இதன் போது பிராந்திய விவகாரம் குறி த்து இரு தரப்பு க்கும் இடையில் பேச்சுவார்த்தை இடம்பெற்றதாக எர்டொகனின் உதவியாளர் ஒருவர் குறிப்பிட்ட போதும் அதுபற்றி மேலதிகமாக எந்த விபரமும் வெளியிடப் படவில்லை.
காசாவை ஆளும் ஹமாஸ் அமைப்புடன் துருக்கி பிரதமர் நெருங்கிய உறவை பேணி வருகிறார். கடந்த 2012 செப்டம்பரில் இருந்து மிஷால் துருக்கிக்கு விஜயம் மேற்கொள்ளும் மூன்றாவது முறை இதுவாகும். tn

Post a Comment