சவுதி அரேபியாவில் கார் ஓட்டிய பெண்களுக்கு 300 ரியால் அபராதம்

சவுதி அரேபியாவின் சாலைகளில் பெண்கள் கார்களையோ இதர வாகனங்களையோ ஓட்டிச் செல்ல கூடாது என தடை செய்துள்ளனர்.
இந்த தடையை மீறும் பெண்கள் போலீசார் மற்றும் மததலைவர்களால் தண்டிக்கப்பட நேரிடும் எனவும் அவர்கள் எச்சரித்தனர்.
இந்நிலையில், நேற்று கடை மற்றும் அலுவலங்களுக்கு கார்களை ஓட்டிச் சென்ற சுமார் 60 பெண்கள் தாங்கள் கார் ஓட்டிச் சென்ற புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளனர்.
தலைநகர் ரியாத்தில் கார் ஓட்டிச் சென்ற 6 பெண்களையும், நாட்டின் இதர பகுதிகளில் கார் ஓட்டிய மேலும் 10 பெண்களையும் கைது செய்த போலீசார் அவர்களுக்கு தலா 300 ரியால் (இந்திய மதிப்புக்கு சுமார் 5 ஆயிரம் ரூபாய்) அபராதம் விதித்தனர்.
சவுதி அரசின் சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட்டு நடப்பேன் என அபராதம் விதிக்கப்பட்ட பெண்களிடமும் அவர்களது தந்தை அல்லது கணவரிடமும் உறுதிமொழி பத்திரம் எழுதி வாங்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.
உலகிலேயே பெண்கள் கார் ஓட்டக்கூடாது என தடை செய்துள்ள ஒரே நாடு சவுதி அரேபியா தான் என்பது குறிப்பிடத் தக்கது.
உலகிலேயே தொழுகைக்காக அதான் சொல்லப்பட்டதும் வேலைகள் நிறுத்தப்பட்டு வேலைத் தளங்கள் முடப்படும் ஒரே நாடும் ஸவுதி அரேபியாவே.
ReplyDeleteஉலகிலேயே எந்த நாட்டை, எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருப்பினும் பெண்கள் வெளியே செல்லும்போது கருப்பு ஆடை (அபாயா) அணிந்து செல்ல வேண்டும் என்ற சட்டம் விதிக்கப்பட்டுள்ள ஒரே நாடும் ஸவுதி அரேபியாவே.
உலகிலேயே ஒரு ஆண், அந்நியப் பெண் ஒருவருடன் தனித்திருந்தாலே சிறையில் அடைக்கப்படும்
ஒரே நாடும் ஸவுதி அரேபியாவே.