ஆப்கானில் சாலையோர குண்டு வெடித்து திருமண கோஷ்டியினர் 18 பேர் பலி
ஆப்கானிஸ்தானின் காஸ்னி மாகாண அந்தர் மாவட்டத்தில் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சிற்றுந்தில் 23 பேர் பயணம் மேற்கொண்டனர். அப்போது பஷ்தூன் பழங்குடியினர் வசிக்கும் பகுதியின் சாலையோரத்தில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த வெடிகுண்டின் மீது அந்த சிற்றுந்து ஏறியது. இதில் அந்த சிற்றுந்து வெடித்து சிதறியது.
இதில் 14 பெண்கள், 1 குழந்தை, 3 ஆண்கள் என 18 பேர் பலியாயினர். இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. உயிர்பிழைத்த 5 பேரும் பெண்கள் என கூறப்படுகிறது. இந்த தாக்குதலை நாங்கள் நடத்தவில்லை தலிபான்கள் மறுத்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு படையினர் மற்றும் அதிகாரிகளை குறிவைத்து தலிபான்கள் இதுபோன்று நடந்தும் தாக்குதல்களில் பொதுமக்கள் பலர் பலியாகின்றனர் என்று கூறப்படுகிறது.
அமெரிக்க தலைமையிலான நேட்டோ படையினர் 97 ஆயிரம் பேர் ஆப்கானிஸ்தான் அரசிற்கு ஆதரவாக இருந்து வருகின்றனர். இவர்கள் அடுத்த ஆண்டு ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறவுள்ளனர். இந்நிலையில் அவர்களை குறிவைத்தும் தலிபான்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

Post a Comment