Header Ads



புத்தளத்தில் விபத்து 3 பேர் பலி, 8 பேர் காயம்

(Tm) புத்தளத்தில் சற்று முன்னர் இடம்பெற்ற விபத்தில் 3 பேர் பலியானதுடன் 8 பேர் காயமடைந்துள்ளனர். புத்தளம்-அநுராதபுரம் வீதியில் பாரிய எனுமிடத்திலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

வீதியோரத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த சீமெந்து ஏற்றப்பட்டிருந்த வாகனத்தில் வான் மோதியே விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் காயமடைந்தவர்கள் கருவலகஸ்வெவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாதம்பேயிலிருந்து ஜயசிறி மகா போதிக்கு சென்றவர்களே இந்த விபத்தில் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

சம்பவத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை மூன்றாக அதிகரித்திருப்பதாக தெரிவித்த பொலிஸார், ஆண்ணொருவரும்,பெண்ணொருவரும், சிறுமியொருவருமே பலியாகியிருப்பதாக தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.