Header Ads



பொரளை அஹதியாவின் 25வது வருட நிறைவு விழா (படங்கள்)


(ஏ.எஸ்.எம்.ஜாவித்)  

பொரளை அஹதியாவின் 25வது வருட நிறைவு விழாவை முன்னிட்டு பொரளை அஹதியா இஸ்லாமிய கல்வி நிலையம் அதன் அதிபர் ஷிப்லி ஹாஸிம் தலைமையில் பொரளை அல்-ஹிஜ்ரா முஸ்லிம் வித்தியாளயத்தில் இன்று 13-10-2013 ஏற்பாடு செய்திருந்தது.

மேற்படி நிகழ்விற்கு பிரதம அதிதியாக ஜனாதிபதியின் முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பான ஆலோசகர் கலாநிதி ஹஸன் மௌலானாவும் கௌரவ அதிதிகளாக முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சாகுல் ஹமீட் மொஹமட், அகில இலங்கை மத்திய அஹதியா சம்மேளனத்தின் உதவித் தலைவர் ஸப்வான் ஹாஜி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்வின்போது பொரளை அஹதியா பாடசாலையினால் நடாத்தப்பட்ட இஸ்லாமிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களும், பரிசுகளும் வழங்கப்பட்டதுடன் மாணவர்களின் நிகழ்வுகளும் மேடையில் இடம்பெற்றன.




No comments

Powered by Blogger.