மீரா இஸ்ஸடீனின் 02வது மறுப்பறிக்கை.

1ம் குற்றச்சாட்டு
அங்கத்தவர்கள் வகுப்பு வாதமாகப் பிரிந்தது கவலை என்று கூறும் இவர் அதற்குக் காரணம் தலைவர்தான் என்கின்றார்.
பதில்
இலங்கை பத்திரிகை ஸ்தாபனமும் பத்திரிகை ஆசிரியர் சங்கமும்தேசிய ரீதியில் நடாத்திய போட்டியில் இரு தடவைகள் சூழலியலுக்கான விருதை வென்ற இம்மாவட்டத்தின்; ஒரேயொரு சிரேஷ்ட பத்திரிகையாளரும் உங்கள் மனைவியின் மாமாவுமான பி.எம்.எம்.ஏ காதரை சபை பிரேரித்த போது பெருமனம் கொண்டு விட்டுக் கொடுத்திருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்;காது. எமது அமைப்பின் 18 வருட கால வரலாற்றில் ஒரு தேர்தல் நடைபெற்றது உங்களால் தான் .நான் என்ன செய்வது என்னையும் செயலாளரையும் ஏகமனதாகத் தெரிவு செய்த 50பேர் கொண்ட சபை உங்களையும் அப்படிச் செய்திருக்கும். எல்லாம் நம்ம நம்ம நடப்பில இருக்கு பாருங்க.
2ம் குற்றச்சாட்டு
பொருளாளர் மப்றூக் அவர்கள் தலைவருக்கு ஒத்துழைப்பதில்லை என்று ஒரு பிரசாரம் அங்கத்தவர் மத்தியில் உள்ளது என்று கூறுகிறார்.
பதில்
உண்மைதான் மப்றூக், அதற்குத்தான் உங்களை வாக்களித்தவர்களில் 40பேர் புறக்கணித்தனர்.
3ம் குற்றச்சாட்டு
வருடாந்த கணக்கறிக்கையை சமர்ப்பித்ததாகவும் அதனை எல்லோரும் ஏற்றுக் கொண்டதாகவும் கூறிவிட்டு, பொருளாளர்தான் நிதி மோசடி செய்ததாகத் தலைவர் கூறுகின்றார் என்பது அவரது விளக்கம்.
பதில்
வருடாந்த கணக்கறிக்கை சமர்ப்பிப்பது என்று நீங்கள் வாய் மூலம் கூறிய விடயம் 50 அங்கத்தவர்களில் 05 பேருக்காவது எழுத்து மூல அறிக்கை சமர்ப்பித்திருந்தால் இன்று இந்தப் பிரச்சினையெல்லாம் இல்லை.
4ம் குற்றச்சாட்டு
போக்குவரத்துச் செலவு என்று கூறி தலைவர் 7000ஃஸ்ரீ ரூபாவை பிடுங்கிவிட்டார் என்று கூறுகின்றார்.
பதில்
சம்மாந்துறையில் கடந்த ஆகஷ்ட் மாதம் நடைபெற்ற ஊடக குடும்பத்தார்களின் குடும்ப சவாரிக்காக ½ சொகுசு பஸ் ஒன்று பயணத்துக்காக ஏற்படுத்தப்பட்டது.(காலை 08மணி முதல்).இது அக்கரைப்பற்று ஆடீஐ பஸ் சேவை. அந்த பஸ் அக்கரைப்பற்றிலிருந்து கல்முனை வரை சென்று அங்கிருந்து நேராக விழா நடைபெறும் இடமான சம்மாந்துறை ஜனாதிபதி விளையாட்டு மைதான வளாகத்துக்குச் சென்று மாலை 05.00 மணிக்கு மீண்டும் ஊடகவியலாளர்களை ஏற்றிக் கொண்டு கல்முனை சென்று அங்கிருந்து அக்கரைப்பற்றுக்கு வந்தது. இதற்காக நாங்கள் கொடுத்த தொகை 7000 மட்டும் தான்.
5ம் குற்றச்சாட்டு
என்னையும்; அதே நண்பர்களில் பெரும்பாலானோர் பொறுமையாக இருக்கும்படி வேண்டிக்கொண்டார்கள்
6ம் குற்றச்சாட்டு
ரூபா 1200 தொடர்பான விடயம்
உங்களின் கூற்றுப்படி கறாராக வேலை செய்யும் நீங்கள் செயலாளருக்கான கொடுப்பனவையும் காசோலை மூலம் வழங்கிஇருக்கலாம் தானே. நோயாளிக்கு காசோலை மூலம் கொடுக்க வேண்டும் என்றால் இதனையும் அவ்வாறு செய்திருக்கலாம் தானே.
7ம் குற்றச்சாட்டு
எல்லா பிரமுகர்களும் ஒதுக்கிய நிதியில் பெறப்பட்ட பொருட்கள் ஊடகவியலாளர்களுக்கு வழங்கப்பட்டன. ஹரீஸ எம்.பி ஒதுக்கிய நிதி உங்களுக்கு மட்டும் கிடைத்தது. பிரதேச செயலகத்தால் குறித்த ஒதுக்கீட்டின் மூலம் கொள்வனவு செய்த பொருட்களை தலைவர் செயலாளர் பெற்றுக் கொண்டதற்கான எழுத்து மூல ஆவணம் சமர்ப்பிக்கப்படவில்லை. இதனை எங்கு பரிசீலிப்பதற்கு அனுப்பலாம் என்பது உங்களுக்குத் தெரியும் தானே.
8ம் குற்றச்சாட்டு
எனது ஒழுக்க நெறிமுறை பற்றி சிலாகிக்கப்பட்டது. மார்க்கத்துக்கு முரணாக நடந்தது எனக் கூறி என்னை எந்தப் பள்ளிவாசல் நிருவாகமும் விசாரிக்கவில்லை. விளங்கினால் சரிதான். எனது குடும்ப வாழ்க்கை அல்குர்ஆன் 04ம் அத்தியாயம் 23ம்,24ம் வசனங்களின் அடிப்படையில் அமைந்தது. அத்துடன் அல்குர்ஆன் 58வது அத்தியாயம் (தர்க்கிப்பவள்) 02ம் வசனம் எனக்கு அல்லாஹ்வால் எனக்கு போதுமாக்கப்பட்டது . எதனைப்பற்றியும் கவலையில்லை ஈமான் இஸ்லாம் தெரிந்தவர்கள் கவலைப்படமாட்டார்கள்
9ம் குற்றச்சாட்டு
நான் முஸ்லீம் மீடியா போரத்தில் ஆரம்ப கால உபதலைவர்களில் ஒருவராகவும், பொருளாளராகவும் மீண்டும் உபதலைவராகவும் பதவி வகித்தவன் தேசிய ரீதியில் இவ்வருடம் நடைபெற்ற பொருளாளர் பதவியில் சுமார் 15 வாக்களவு குறைந்ததனால் தோல்வியடைந்தது உண்மைதான். அம்பாரை மாவட்டத்திலிருந்து நான் யாரையும் அழைத்துச் செல்லவில்லை. சோந்த வேலை காரணமாக வந்த நான்கு ,ஐந்து பேர் வந்திருந்தனர். வென்ற சகோதரன் பாயிஸை வாழ்த்திவிட்டு தலைவருக்கும் வாக்களித்தவர்களுக்கும் சலாம் கூறி விட்டு ஊருக்கு பஸ் ஏறியவன். யாரையும் வசை பாடவில்லை.
10ம் குற்றச்சாட்டு (தலைவர் சேறு அடிக்கிறார்.என்ற குற்றச்சாட்டு)
எனது 39 வருட ஊடக வாழ்க்கையில் எவருக்கும் நான் சேறு பூசியதில்லை. எனக்கு சேறு பூசமுற்பட்டவர்களை நான் விட்டுவைத்ததுமில்லை.
Post a Comment