வடமாகாண சபை உறுப்பினர்களுக்கான முதலாவது செயலமர்வு
(ஏ.எஸ்.எம்.இர்ஷாத்)
வடமாகாண சபை உறுப்பினர்களுக்கான முதலாவது செயலமர்வு இன்று வியாழக்கிழமை (24) யாழ்ப்பாணம் ரில்கோ ஹோட்டலில் ஆரம்பமானது. இதில் வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி, வடமாகாண முதலமைச்சர் சி.விக்னேஸ்வரன் மற்றும் வடமாகாண சபைக்கு தெரிவு செய்யப்பட்ட அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். வடமாகாண சபையின் சட்டதிட்டங்கள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பாக இதன்போது விளக்கமளிக்கப்பட்டது.



Post a Comment