Header Ads



கண்டி மாவட்ட ஜும்ஆ மேடைகளில் அரசியல் பிரச்சாரம்

(L.A.U.L.M.Naleer)

நேற்றைய வெள்ளிக்கிழமை கண்டி நகர் உட்பட பல ஊர்களிலும் ஜும்ஆ பிரசங்கங்களில் அரசியல் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரியவருகிறது.

தேர்தல் ஆணையாளரால் பிரச்சாரப் பணிகள் தடை செய்யப்பட்டிருந்த தினமான நேற்று கண்டி இன்னும் பல உள்ளூர்களில் இடம்பெற்ற பிரசங்கங்களிலும் கட்டாயமாக ஒவ்வொருவரும் வாக்குரிமையை பாவிப்பதன் அவசியம் பற்றிக் கூறுவதோடு நிறுத்தாது, கட்சி சார் அரசியலுக்கான தேர்தல் பிரச்சாரங்களில் உலமாக்கள் ஈடுபட்டதாக  ஜும்ஆ பிரசங்கத்தை செவிமடுத்தோர் தெரிவிக்கின்றனர்.

மேலும் அவர்கள், ஒரு கட்சியை ஆதரிப்பது தனி மனித சுதந்திரம். அந்தவகையில், உலமாக்களும் எந்தவொரு அரசியல் கட்சியையும் ஆதரிப்பதில், வாக்குச் சேர்ப்பதில் தவறில்லை. ஆனால், மிம்பர்களை அவர்கள் தனிப்பட்ட அரசியலுக்காகப் பயன் படுத்துவது தடை செய்யப் பட வேண்டும் என்றும்,  அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா தமக்குக் கீழ் இயங்கும் சட்ட ஒழுங்கையும், ஜனநாயகத்தையும் மீறிச் செயற்படும் உலமாக்கள் விடயத்தில் தீர்க்கமான நடவடிக்கைகளை மேற்கொள்ளாதவிடத்து, அது உலமா சபையினரை மாத்திரமல்ல முழு முஸ்லிம் சமூகத்தையும் பாதிப்புக்கு உள்ளாக்கும் நிலைக்கு இட்டுச் செல்லும் என்றும் விசனம் தெரிவிக்கின்றனர்.

2 comments:

  1. இப்படித்தான் நமது முல்லாக்கள் மோடத்தனமாக சட்டத்தை மீறி நடந்து கொள்வார்கள். பின்னர் அதனை பொது பல சேனா தூக்கிப் பிடித்துக் கொண்டு மிம்பர்களையும், பள்ளிகளையும் உடைக்க வருவார்கள்.

    -புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-

    ReplyDelete
  2. We already have mosques for Thabligh,Jamath-Islami,Thowheed,and so on,very soon we can
    also have UNP mosque,SLFP mosque,SLMC mosque and TNA mosque in the north.

    ReplyDelete

Powered by Blogger.