Header Ads



ஐ.தே. கட்சியின் தலைமைத்துவ மாற்றம் அவசியம் - மேல் மாகாண சபை உறுப்பினர்கள் குழு

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவ மாற்றம் உட்பட கட்சி மறுசீரமைக்கப்பட்ட வேண்டும் எனத் தெரிவிக்கும் யோசனை ஒன்றை ஐக்கிய தேசியக் கட்சியின் மேல் மாகாண சபை உறுப்பினர்கள் குழு 24-09-2013  ஏகமனதாக நிறைவேற்றியுள்ளதாக அந்த குழுவின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜோசப் மைக்கல் பெரேராவின் மகனும், மேல் மாகாண சபையின் உறுப்பினருமான ஸ்ரீநாத்  மஹேந்திர பெரேரா, இதற்கான யோசனைகள் அடங்கிய பிரேரணையை உறுப்பினர் குழுவிற்கு சமர்பித்துள்ளதாக அந்த சிரேஷ்ட உறுப்பினர் தெரிவித்துள்ளார். Nf

No comments

Powered by Blogger.