Header Ads



வடமாகாணசபைத் தேர்தலும், முஸ்லிம் காங்கிரசின் கழுத்தறுப்பும்

(கே. சீ. எம். அஸ்ஹர்)

அண்மையில் முடிவடைந்த வடமாகாண சபைத் தேர்தலுக்கு முன்பு நாம் பலமுறை வலியுறுத்தினோம் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசை அரசுடன் இணைந்து கேட்குமாறு ஆனால், அது செவிடன் காதில் ஊதிய சங்குபோலவே இருந்தது. வன்னி மாவட்டத்தில 03 பாராளுமன்ற உறுபினர்களை நாம் வைத்திருக்கிறோம். ஆனால், இம்முறை நிகழ்ந்த வடமகாண சபைத் தேர்தலில் 02 முஸ்லிம் உறப்பினர்களை மன்னாரிலும், 01 உறுப்பினரை முல்லைத்தீவிலும், ஒரு சிங்கள உறுப்பினரையும்  பெற்றிருக்கிறோம். இதில் மன்னாரில் ஒன்றும், முல்லைதீவில் ஒன்றும், வவுனியாவில் ஒரு சிங்கள சகோதர உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரசை சேர்ந்தவர்கள் மன்னாரில் மிகக் குறைந்த வாக்கில் 01  உறுப்பினரை முஸ்லிம் காங்கிரஸ் பெற்றுள்ளது. 

அகில இலங்கை மக்கள் காங்கிரசிற்குக் கிடைக்கவிருந்த இரண்டாவது உறுப்பினர் 65 வாக்குகளால் மன்னார் மாவட்டத்திற்கு தெரிவு செய்யப்படாமல் போய் இருக்கிறார். இதற்கான முழுக் காரணமும் சிறிலங்கா முஸ்லுpம் காங்கிரஸ் ஆகும். இரண்டாவது உறுப்பினர் முசலிப்  பிரதேசத்தில் இருந்தே தெரிவு செய்யப்படும் வாய்ப்பு இருந்தது. முசலிப் பிரதேசத்திற்கு ஒரு மாகாண சபை உறுப்பினர் கிடைத்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் பாராளுமன்ற உறுப்பினர்களும் அங்கு வந்து இந்த அநியாயத்தைச் செய்துள்ளனர்.

அகில இலங்கை மக்கள் காங்கிரசிற்கு செல்வாக்கு அதிகமிருந்த பிரதேசங்கட்குச் சென்று தேவையற்ற பீதிகளை உருவாக்கி முஸ்லிம் வாக்கு வீதத்தை குறைக்கும் கைங்கரியத்தை இவர்களே செய்துள்ளனர். இவர்கள் தமிழ்க்கூட்டமைப்புடன் தொடர்பை வைத்துக்கொண்டு அவர்கட்கு மேடைகளில் வாழ்த்துக்களைத்  தெரிவித்து வந்துள்ளனர்.

இவர்களின் சுயரூபத்தை வடமாகாண முஸ்லிம்கள் கண்டு கொள்ளவேண்டும். வவுனியா, முல்லைத்தீவு போன்ற பிரதேசங்களில் வெற்றி பெறமாட்டோம்  எனத்தெரிந்திருந்தும் அங்கு வேட்பாளர்களை நிறுத்தி முஸ்லிம் வாக்குகளை அநியாயமாக நாசமாக்கினர். வவுனியாவில் முஸ்லிம் காங்கிரஸ் போட்டியிடாமல் இருந்திருந்தால், அல்லது அரசுடன் இணைந்து கேட்டிருந்தால் ஒரு முஸ்லிம் பிரதிநிதி தெரிவுசெய்யப்பட்டிருப்பார். ஷஎதிரிக்கு சகுனப்பிழை ஏற்படவேண்டும் |என்பதற்காக தனது மூக்கை அறுத்துக் கொண்ட கதைபோல் உள்ளது முஸ்லிம்  காங்கிரசின் செயல்.

தமிழ்க் கட்சிகள் ஓரணியில் நின்று கொண்டு தமிழ் மக்களின் வாக்களிப்பு வீதத்தைக் கூட்ட முஸ்லிம் காங்கிரஸ் பிரிந்து நின்று முஸ்லிம்களின் வாக்களிப்பு விகிதத்தை இயன்றவரை குறைத்தது.

   பலசேன, இராவணசேன என்பனவற்றின் செயற்பாடுகளை ஒரு முதலீடாகப் பாவித்து சில பிரதேசங்களில் முஸ்லிம் காங்கிரஸ் சில ஆசனங்களைப் பெற்றுள்ளது. வடமாகாணத்தில் முஸ்லிம் காங்கிரசின் திட்டமிட்ட செயற்பாடுகள் தமிழ்க்கூட்டமைப்புக்கு அதிக ஆசனங்களைப் பெற்றுக்கொள்ள பேருதவியாக இருந்துள்ளது. விரைவில் முஸ்லிம் காங்கிரசும், தமிழ்க்கூட்டமைப்பும் சந்தித்துப்பேசும் வாய்ப்பு அதிகமுள்ளது. இதில் இருவரும் இணைந்து கிழக்கு மாகாணத்தை ஆளுவோமா? என ஆராய்ந்தாலும் ஆச்சரியமில்லை.

ஆடு உறவு குட்டி பகை என்ற அடிப்படையில் முஸ்லிம் காங்கிரஸ் நடந்துள்ளது. மத்தியில் அரசுடன் நல்ல உறவை வைத்துக்கொண்டு, சலுகைகளை அனுபவித்துக்கொண்டு மாகாணத் தேர்தலில் அரசுக்;கு  எதிராக பிரச்சாரத்தில் ஈடுபட்டது எவ்வகையில் நியாயம்.

வடமாகாண முஸ்லிம்கட்கு எவ்வித உதவியும் புரியாமல் சந்தர்ப்பவாத அரசியலை நடாத்த வந்த முஸ்லிம் காங்கிரசுக்கு இம்மக்களிடம் வாக்குக் கேட்க என்;ன உரிமை இருக்கிறது. வடபுல முஸ்லிம்களின் இன்பத்திலும், துன்பத்திலும் இரண்டறக் கலந்து நின்ற அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்தான் எமது உண்மையான நண்பன். அரசுக்கெதிரான வெற்றுக் கோசங்களாலும், வீராவேசத்தாலும் வடபுல முஸ்லிம்களுக்கு எதுவும் கிடைக்கப்போவதில்லை என்பதை முஸ்லிம் காங்கிரஸ் புரிந்துகொள்ள வேண்டும்.

வடபுல அரசியல் களத்தில் இருந்து அமைச்சர் றிசாட் பதியுதீன் அவர்களை வெளியேற்றுவதற்கு என்ன சதி வேலையோ, கபடவேலையோ என்றாலும் செய்வதற்கு முஸ்லீம் காங்கிரஸ் தயாராக உள்ளது. ஆனால், வடபுலத்தில் இருந்து விரைவில் முஸ்லீம் காங்கிரஸ் வெளியேற்றப்படும் அதற்குரிய தைரியமும் ஒற்றுமையும் எமது மக்களிடம் உண்டு.

வீராவேசப் பேச்சுக்களும், பத்திரிகை அறிக்கைகளும், தொலைக்காட்சி விவாதங்களும் வடபுல முஸ்லீம்களுக்கு ஒன்றையும் செய்யப்போவதில்லை. எமது தேவைகளைப் பூர்த்தி செய்யும் தூய எண்ணமும் சக்தியும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸிடம் மட்டுமே உண்டு. இதுதான் யதார்த்தம்.

1 comment:

  1. வெட்கமாக இருக்கிறது முஸ்லிம்களின் நிலை, நீ பெரியவனா? நான் பெரியவனா? என்ற போட்டியில் இழந்தது முஸ்லிம்களின் தன்மானம் தான், வடபுல தமிழ் மக்களின் கால் தூசுக்கும் பெறுமதி அற்றவர்கள் நாம் அரசியல் வாதிகளும் அவர்களுக்கு கூஜா தூக்கும் சில கோடரிக்கம்புகளும் , ஆளுக்காள் நாம் அஷ்ரப்பின் பாசறையில் வளர்த்தெடுக்கப்பட்டவர்கள் என்று பீற்றிக்கொள்பவர்கள், இதைத்தான் அவர் கற்றுத்தந்த பாடமா? அம்மாமனிதரின் மானத்தை விற்று எவ்வளவு நாட்களுக்கு பிழைப்பு நடத்தப்போகிறார்கள். இவர் அவரை ஏசுவதும், அவர் இவரை ஏசுவதும், ஏன் இந்த நாய் பொழப்பு? என்று தான் விமோசனம் கிடைக்குமோ அல்லாஹ் போதுமானவன்

    ReplyDelete

Powered by Blogger.