Header Ads



உடுநுவரை அரசியல் தன்மானத்தை தக்கவைக்க, அக்குறணையும் மடவளையும் அடகு வைப்பு

(J.M.Hafeez)

நடந்து முடிந்த மத்தி மாகாண சபைத் தேர்தலில் கண்டி மாவட்டத்தில் முக்கிய பிரதேசமான அக்குறணை மற்றும்  மடவளை பிரதேச மக்கள் தங்கள் பிரதிநிதிகளை சொற்ப தொகையில் பறிகொடுத்துள்ளனர். அதேவேளை உடுநுவர பிரதேச மக்கள் தமக்கென ஒரு பிரதி நிதியைத் தக்க வைத்துக் கொண்டனர்.

மாகாண  சபை முறை கொண்டு வரப்பட்ட காலம் முதல் அக்குறணை மற்றும் உடுநுவர, கம்பளை ஆகிய பிரதேசங்களைப் பிரதி நிதித்துவப் படுத்தும் பிரதி நிதிகள் தொடந்து தெரிவாகி வந்துள்ளதுடன் பாராளுமன்ற அங்கத்தவர்களையும் தக்கவைத்தே வந்துள்ளன.

குறிப்பாக அமைச்சாகளான ஏ.சி.எஸ் ஹமீத், ஏ.ஆர்.எம்.ஏ.காதர் ஆகியோர்களது வாரிசு களாக பலர் இருந்து வந்துள்ளனர். மறைந்த ரபீக் ஹாஜியார், அவர் புதல்வர் அம்ஜாத், முதலானவர்களுடன், எம்.டி.எம்.அமீன், எஸ்.எம்.எம்.மர்ஜான், ஏ.எல்.எம். உவைஸ். நயீமுல்லாஹ்(நாவலப்பிட்டிய) போன்றவர்கள் உடுநுவர மற்றும் கம்பளைப் பகுதிகளைத் தொடர்ந்து ஒவ்வொரு காலப் பகுதியிலும் தக்க வைத்து வந்துள்ளனர். அதேபோல் சட்டத்தரணி எஸ்.எம்.பாருக், உபைதுல்லா, எம்.எச்.ஏ ஹலீம், எம்.எஸ்.எம்.சாபி ரிஸ்வி பாரூக்  போன்றவர்கள் அவ்வப் போது ஹாரிஸ்பத்துவ தொகுதியில் மத்திய மாகாண சபையில் முஸ்லிம் பிரதி நிதித்துவத்தை தக்கவைத்து வந்துள்ளனர்.

அதேவிதமாக ஏ.ஆர்.எம்.ஏ.காதர் கம்பளை உடுநுவரப் பகுpகளை பாராளுமன்றத்தில் பிரதி நிதித்துவப் படுத்தி வந்துள்ளதுடன் ஏ.சீ.எஸ்ஹமீத், எம்.எச்.ஏ.ஹலீம் ஆகியோர் ஹாரிஸ்பத்துவ தொகுதியை (அக்குறணையை) பிரதி நதித்துவப் படுத்தி வந்துள்ளனர்.

இது தவிர உடுநுவரைப் பிரதேச சபைத் தலைவராக ஏ.எல்.எம்.உவைஸ் அவர்களும் அக்குறணைப் பிரதேச சபையின் தலைவராக எம்.எஸ்எம்.சுலைமான், ஹலீம்தீன், ஏ.எம்.எம்.சிம்ஸான், போன்றவர்கள் தொடர்ந்து தக்கவைத்து வந்துள்ளனர்.

இதேபோல் பைசர் முஸ்தபா போன்றவர்களும் மடவனை மன்னுக்கு புகழ் சேர்த்தனர். அமைச்சர் றவுப் ஹகீம் அவர்களும் மடவளைக் குதிரையில் அவ்வப் போது சவாரி செய்து மடவளைக்கு பக்கபலமாக இருந்துள்ளார். பாத்ததும்பறைப் பிரதேச சபையின் உபதலைவராக மலீக் மற்றும் சீசர்முஹமட் ரியான் போன்றவர்கள் மடவளையின் பிரதி நிதிகளாகச் செயல்பட்டுள்ளனர்.

இவ்வாறு நீண்ட வரலாற்று அரசியல் பின்னணியைக் கொண்ட மூன்று பிரதேசங்களான அக்குறணை, உடுநுவரை, மடவளை என்பன தமக்கென ஒரு பிரதி நிதியை தொடாந்து பெற்றுவந்துள்ளன. ஆனால் இம்முறை இம்மூன்று பிரதான பகுதிகளில் உடுநுவரை மட்டும் ஸ்ரீல.மு.கா.சார்பாக ஏ.எல்எம்.உவைஸ் அவர்களை தமக்கென ஒரு பிரதி நிதியாகப் பெற்றுள்ளன.

அக்குறணைப் பிரதேசத்தில் முன்னாள் அங்கத்தவர்களான சாபி, ரிஸ்லி பாரூக், உற்பட ஸ்ரீல.மு.கா. சார்பாகப் போடடியிடடவர்களும் சொற்ப தொகையில் தோல்வி அடைந்துள்ளனர்.

 அதே போல் மடவளைக்கு கிடைக்க இருந்த வாய்ப்பான ஐ.தே.க. மலீக், மற்றும் ஸ்ரீல.மு.கா.ல் போட்டியிட்ட ஜே.எம்.யாசீன் போன்றவர்கள் சொற்ப தொகையில் தோல்வி அடைந்துள்ளனர்.

இந்த அடிப்படையில் பலம் பெரும் கிராமமான உடுநுவரை தனது தன்மானத்தை தக்கவைத்துள்ளது. பலம்பெரும் பெருமை பேசும் மடவனையும் அக்குறணையும் தமது அரசியல் தன்மானத்தை முடிவடைந்த மாகாண சபைத் தேர்தலில் அடகு வைத்த நிலையையும் காணமுடிகிறது.

2 comments:

  1. அண்மைய முஸ்லிம் சமூகம் அரசியலிலும் சரி சமூகப்பணியிலும் சரி எதனை சிறப்பான முறையில் செய்தார்கள் என்று மனமார பாராட்டக்கூடிய நிகழ்வுகள் எதாவது உண்டா? ஹஜ் கோட்டாவுக்கு சண்டை, பள்ளிகள் உடைப்பு சம்பந்தமாக பிரச்சினை, ஒருத்தர் உடைக்கப்பட்டது என்கிறார், இன்னொருவர் அப்படி எதுவுமே இல்லை என்கிறார், இன்னொருவர் மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல், இந்நிலை தொடர்ந்தால், முஸ்லிம் என்ற ஓர் அடையாளத்தை தொலைக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை

    ReplyDelete
  2. அண்மைய முஸ்லிம் சமூகம் அரசியலிலும் சரி சமூகப்பணியிலும் சரி எதனை சிறப்பான முறையில் செய்தார்கள் என்று மனமார பாராட்டக்கூடிய நிகழ்வுகள் எதாவது உண்டா? ஹஜ் கோட்டாவுக்கு சண்டை, பள்ளிகள் உடைப்பு சம்பந்தமாக பிரச்சினை, ஒருத்தர் உடைக்கப்பட்டது என்கிறார், இன்னொருவர் அப்படி எதுவுமே இல்லை என்கிறார், இன்னொருவர் மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல், இந்நிலை தொடர்ந்தால், முஸ்லிம் என்ற ஓர் அடையாளத்தை தொலைக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை

    ReplyDelete

Powered by Blogger.