ஐக்கிய தேசியக் கட்சியும், ஜே.வி.பியும் மீண்டும் எழுந்து வரமுடியாது - மைத்திரிபால சிறிசேன
நடந்து முடிந்த மாகாண சபைத் தேர்தல் ஐக்கிய தேசியக் கட்சியும் ஜே.வி.பியும் மீண்டும் எழுந்து வர முடியாதளவில் வரலாற்றின் குப்பைக் கூடைக்குள் வீழ்ந்துள்ளதாக அமைச்சரும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் செயலாளருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களில் இந்த இரு கட்சிகளும் கடும் தோல்வியை சந்தித்துள்ளன. அரசாங்கம் மக்களின் உரிமைகளை பாதுகாப்பதில் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு மக்கள் அங்கீகாரம் வழங்கியுள்ளனர்.
அரசாங்கத்திற்கு எதிரான எதிர்க்கட்சிகளின் பொய் பிரசாரங்களை மக்கள் நிராகரித்துள்ளனர். அதேவேளை வடக்கின் தேர்தல் முடிவுகள் அரசாங்கத்தின் ஜனநாயக நடவடிக்கைகளை உறுதிப்படுத்தியுள்ளது.
அரசாங்கம் ஜனநாயகத்தை ஏற்படுத்த மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பில் அரசாங்கத்திற்கு எதிராக குற்றம் சுமத்துபவர்கள் வடக்கின் தேர்தல் முடிவுகள் மூலம் உண்மையை புரிந்து கொள்ள முடியும் என்றார்.

நீங்களும், உங்களின் அரசாங்கமும் சொல்லி வருகின்ற 'ஜனநாயக'த்தின் கொடூரமான செயற்பாடுகளை எல்லாம் வடக்குத் தேர்தல் பிரச்சார காலத்திலும், தேர்தல் தினத்திலும் நாம் கண்கூடாகக் கண்டோம்.
ReplyDeleteகபே அமைப்பின் உறுப்பினர்களைக்கூட அரச ஆதரவாளர்களே தாக்கியிருப்பதில் இருந்து அரசின் 'ஜனநாயகம்' சர்வதேசத்திற்கும் தெரிந்திருக்கும்.
-புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-