முஸ்லிம்களின் நிலைப்பாடு கவலைக்குரியதாக அமைந்துள்ளது
நடந்து முடிந்த மூன்று மாகாண சபைகளுக்குமான தேர்தல் பெறுபேறுகள், முஸ்லிம் சமூகம் படிப்பினை பெற்று ஒற்றுமைப்படுவதன் அவசியத்தை உணர்த்தியுள்ளது என சர்வதேச இளைஞர் பாராளுமன்றத்தின் பிரதித் தலைவர் முயீஸ் வஹாப்தீன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கருத்து தெரிவிக்கையில் மேலும் கூறியதாவது;
"வடக்குத் தமிழ் மக்கள் எவ்வளவோ அழிவுகளுக்குப் பின்னரும் இத்தேர்தலில் இன உணர்வுடன் ஒன்றுபட்டு வாக்களித்து மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் அம்மாகாண ஆட்சியைத் தமதாக்கிக் கொண்டுள்ளனர். அதேபோன்று மத்திய மற்றும் வட மேல் மாகாணங்களில் சிங்கள மக்களும் பேரின சிந்தனையுடன் பெருவாரியாக ஒற்றுமைப்பட்டு தமது நிலைப்பாட்டை உறுதிப்படுத்தியுள்ளனர்.
ஆனால் இத்தேர்தலில் முஸ்லிம் மக்களின் நிலைப்பாடு கவலைக்குரியதாக அமைந்துள்ளதை அவதானிக்க முடிகிறது. நடந்து முடிந்த மூன்று மாகாண சபைகளுக்குமான தேர்தல் முடிவுகள் முஸ்லிம் சமூகம் இன உணர்வு, சமூகப்பற்று எதுவுமின்றி பிளவுபட்டிருப்பதை வெளிப்படுத்தியுள்ளது. இது இலங்கை வாழ் முஸ்லிம் சமூகத்தின் எதிர்காலத்திற்கு பாரிய அச்சுறுத்தலாக அமையும் என்பதில் சந்தேகம் கிடையாது.
சிங்கள சமூகமும் தமிழ் சமூகமும் தமக்குள் ஒற்றுமைப்பட்டு தாம் விரும்பும் ஆட்சியை தீர்மானிக்கும் சக்திகளாக மாறியுள்ள நிலையில் முஸ்லிம் சமூகம் இருந்த ஆசனங்களையும் இழந்து கைசேதமான- துரதிஷ்ட நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது. இது மிகப் பெரும் கவலைக்குரிய விடயமாகும்.
குறிப்பாக குருநாகல் மாவட்டத்தில் கடந்த மாகாண சபையில் நான்கு முஸ்லிம் பிரதிநிதிகள் அங்கம் வகித்திருந்த நிலையில் இம்முறை ஒரே ஒரு ஆசனம் மட்டுமே கிடைத்துள்ளது. அதே போன்று கண்டி மாவட்டத்தில் கடந்த மாகாண சபையில் ஐந்து முஸ்லிம் உறுப்பினர்கள் அங்கம் வகித்திருந்த நிலையில் இம்முறை மூன்று முஸ்லிம் பிரதிநிதித்துவமே கிடைத்துள்ளன.
அதேபோன்று புத்தளம் மாவட்டத்திலும் கடந்த காலங்களுடன் ஒப்பிடும் போது இம்முறை முஸ்லிம்களுக்கு ஆசன இழப்பீடு ஏற்பட்டிருக்கிறது. அதேவேளை வடக்கு மாகாண சபைக்கான முஸ்லிம் பிரதிநிதித்துவமும் போதுமானதாக அமையவில்லை.
ஆக மொத்தத்தில் முஸ்லிம் சமூகம் தமது அரசியல் ஸ்திரப்பாட்டில் தளர்வடைந்து கீழ் நிலைக்கு சென்றுள்ளதை எம்மால் தெட்டத் தெளிவாக உணர்ந்து கொள்ள முடிகிறது.
இதற்கான பொறுப்பை முஸ்லிம் வாக்காளர்களிடம் சாட்டி விட்டு அரசியல் தலைமைகள் ஒதுங்கி விட முடியாது. ஏனெனில் முஸ்லிம் மக்கள் ஒரே நேர்கோட்டில் பயணிப்பதற்கான பொறிமுறையை அரசியல் தலைமைகள் வகுத்துக் கொடுக்கவில்லை என்கின்ற கசப்பான உண்மையை அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டியுள்ளது. இந்த விடயத்தில் சிவில் சமூக நிறுவனங்கள் மற்றும் சன்மார்க்க அமைப்புகள் கூட பொறுப்புக்கூற கடமைப்பட்டிருக்கின்றன.
ஆகையினால் நடந்து முடிந்த இத்தேர்தலில் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்களை தனிப்பட்ட நலன்களுக்கு அப்பால் மனப்பக்குவத்துடன் சரியாக கற்றுக் கொண்டு எதிர்காலத்திலாவது வெற்றி நடை போடுவதற்கான திட்டங்களை வகுத்துச் செயற்படுவதற்கு அனைவரும் முன்வர வேண்டும்.
வடக்கில் ஐந்து தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து பொதுக் கொள்கை ஒன்றின் கீழ் கூட்டமைப்பாக செயற்பட்டு வருவதன் மூலமே யுத்த வீழ்ச்சிக்கு பின்னர் கூட இன்று தமிழ் தேசியம் பலமாக இருக்கிறது.
அது போன்று தென்னிலங்கையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம் இன்றும் பலமாக இருப்பதற்கு ஒரே காரணம் பேரின சிந்தனையுடன் சம்பிக்க ரணவக்கவின் ஜாதிக ஹெல உறுமய, விமல் வீரவன்சவின் தேசிய சுதந்திர முன்னை, தினேஷ் குணவர்த்தனவின் மக்கள் ஐக்கிய முன்னணி போன்ற பல்வேறு கட்சிகள் சுதந்திரக் கட்சி தலைமையில் கூட்டாக செயற்படுவதே காரணம் எனலாம்.
ஆனால் இந்த இரண்டுக்கும் நடுவில் எந்த கொள்கை கோட்பாடுமின்றி நட்டாற்றில் விடப்பட்ட சமூகமாக முஸ்லிம்கள் காணப்படுகின்றனர். இந்த நிலையானது எதிர்காலத்தில் இலங்கை வாழ் முஸ்லிம்களின் ஒட்டு மொத்த இருப்பையும் கேள்விக்குறியாக்கி விடும் என அஞ்ச வேண்டியுள்ளது.
வடக்குத் தேர்தலைத் தொடர்ந்து இனப்பிரச்சினைத் தீர்வுக்கான நகர்வுகள் முன்னெடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன்போது முஸ்லிம் சமூகத்தின் வகிபாகம் என்னவாக அமையப் போகிறது என்ற அச்சமும் எழுகிறது.
ஆகையினால் அடுத்தடுத்து இடம்பெறவுள்ள மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் மற்றும் பாராளுமன்ற பொதுத் தேர்தலைக் கருத்திற் கொண்டு முஸ்லிம் கட்சிகளும் தேசியக் கட்சிகளில் அங்கம் வகிக்கின்ற முஸ்லிம் அரசியல் வாதிகளும் சமூக நலன் கருதி முஸ்லிம் கூட்டமைப்பாக இயங்குவதற்கான தயார்படுத்தல்களை இன்றே மேற்கொள்ள வேண்டும்.
முஸ்லிம் சமூகத்தின் அரசியல் பலத்தை உறுதிப்படுத்துவதற்காக முஸ்லிம் அமைச்சர்கள் போதுமான விட்டுக் கொடுப்புகளைச் செய்து, ஒத்துழைப்பது மிகவும் அவசியமாகும். இதன்போது அரசியலில் ஈடுபடுகின்ற பொது அமைப்புகளையும் உள்வாங்கிச் செயற்படுவது காலத்தின் தேவையாகும்.
இத்தகைய நோக்கத்தை அடைந்து கொள்வதற்கு அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா, பள்ளிவாசல்கள் சம்மேளனங்கள் போன்ற சன்மார்க்க அமைப்புகளும் தேசிய சூரா சபை, முஸ்லிம் கவுன்சில் போன்ற சிவில் சமூக அமைப்புகளும் கூடிய கரிசனையுடன் பங்காற்றுவதற்கு முன்வர வேண்டும்" என்று முயீஸ் வஹாப்தீன் குறிப்பிட்டார்.

very good idea first of all after Asraf sir no proper leader for muslims community Raufhakeem must Resign The Leadership he is not eligible person.Good example for muslims community the north election victory for tamil community.
ReplyDeleteeven if you select 100s of muslims representatives what is the use they will belty they dont have any intention to protect the community the need to fill their pocket as much as possible
ReplyDelete