கடுமையான சூழ்நிலைக்கு மத்தியிலும் வடமாகாண தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பு வாக்களித்துள்ளமை, தங்கள் மீதான நம்பிக்கையை எடுத்துக்காட்டுவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. அதன் பொது செயலாளர் மாவை சேனாதிராஜா இதனைத் தெரிவித்துள்ளார்.
முஸ்லிம் சமூகத்தின் மிகக் கடுமையான விமர்சனங்களுக்கு மத்தியிலும் மிக்க நம்பிக்கையோடு த.தே. கூட்டமைப்புடன் அரசியலில் இணைந்துள்ள நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் தலைமையிலான முஸ்லிம் அரசியல் கூட்டமைப்பினுடனான நல்லுறவை எதிர்காலத்தில் மேலும் மேலும் மேம்படுத்திக் கொள்ள வேண்டியதன் அவசியத்தை கூட்டமைப்பின் பொதுச் செயலாளரான நீங்களும், தலைமையும் உணர்ந்திருப்பீர்கள்.
ReplyDeleteகிழக்கு மாகாண சபைத் தேர்தல் நடைபெற்று முடிந்தபோது, முஸ்லிம் சமூகத்துடனான நல்லுறவை வேண்டி நின்று ஏமாற்றமடைந்த த.தே. கூட்டமைப்புக்கு, வடக்குத் தேர்தலில் இந்த முஸ்லிம் அரசியல் கூட்டமைப்பினர் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றின் மூலம் இணைந்து கொண்டு தமிழ் பேசும் மக்களுடனான நல்லுறவையும், உரிமை அரசியலையும் மேற்கொள்ள முன்வந்தது வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாகும்.
அந்த வகையில் இம்முஸ்லிம் கூட்டமைப்பின் சார்பில் நிறுத்தப்பட்ட வேட்பாளர் அஸ்மின், குறுகிய காலத்திற்குள் அச்சுறுத்தல் நிறைந்த சூழலுக்கு மத்தியிலும் 1009 விருப்பு வாக்குகளைப் பெற்றிருப்பதணை இன நல்லிணக்கத்திற்கும், எதிர்கால தமிழ் முஸ்லிம் மக்களின் உரிமை அரசியல் செயற்பாடுகளுக்குமான அத்திவாரமாகவே நாங்களும், நீங்களும் கருத வேண்டும்.
அரசியல் ரீதியான அலங்காரப் பட்டம், பதவிகளுக்கு அப்பால் அரை நு{ற்றாண்டுகளுக்கும் மேலாக இலங்கை முஸ்லிம் சமூகத்தைக் கட்சி அரசியலால் கட்டுக்குள் வைத்துக் கொண்டிருக்கும் முஸ்லிம் வியாபார அரசியல் கட்டமைப்புக்களின் பலத்த விமர்சனங்களையெல்லாம் தாங்கிக் கொண்டவர்களாக த.தே.கூட்டமைப்புடன் துணிச்சலுடனும், நம்பிக்கையுடனும் இணைந்துள்ள இச்சிறிய முஸ்லிம் சமூக அரசியல் கூட்டமைப்பை கௌரவித்து அவர்களுடன் செய்து கொண்டுள்ள புரிந்துணர்வு உடன்படிக்கையை நேர்மையாக அமுலாக்கம் செய்வதனூடாக எதிர்காலத்தில் பாரிய நம்பிக்கையை வளர்த்தெடுப்பதிலும் அக்கறை செலுத்த வேண்டும்.
-புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-
சிறந்த கருத்து
ReplyDelete