அட்டாளைச்சேனை அந்-நூர் மகா வித்தியாலய விளையாட்டு மைதானம் புனரமைப்பு
திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர அட்டாளைச்சேனை அந்-நூர் மகா வித்தியாலய விளையாட்டு மைதானத்தினை புனரமைப்பதற்கு தயட்ட கிருள-2013 நிதியொதுக்கீட்டின் மூலம் ஒன்பது இலட்சம் ரூபா நிதியினை ஒதுக்கீடு செய்துள்ளதாக பாடசாலை அதிபர் ஏ.எம் இத்ரீஸ் தெரிவித்தார்.
அண்மையில் பாடசாலைக்கு விஜயம் மேற்கொண்ட பாராளுமன்ற உறுப்பினரிடம் பாடசாலை அபிவிருத்திக் குழுவினர் கேட்டுகொண்டதற்கிணங்கவே இந்நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு தற்போது புனரமைப்பு வேலைகள் நடைபெற்றுக்கொண்டிருப்பதாகவும் அதிபர் மேலும் தெரிவித்தார்.
மேற்படி நிதியினை ஒதுக்கீடு செய்தமைக்காக பாராளுமன்ற உறுப்பினர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகரவுக்கு பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்திக் குழுவினர் நன்றி தெரிவிக்கின்றனர்.
.jpg)
.jpg)
Post a Comment