சுதந்திர சதுக்கத்தில் பெளத்த கொடி மாத்திரம் பறப்பது ஏன்..? (படங்கள்)
(ஏ.எல்.ஜுனைதீன்)
இலங்கை நாட்டின் சகல மக்களுக்கும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இடமான சுதந்திர சதுக்கத்தில் ஒரு மதத்தினர் மட்டும் சொந்தம் கொண்டாடக் கூடிய வகையில் பெளத்த மதக் கொடி பறக்கவிடப்பட்டிருக்கிறது.
இந்நாட்டில் வாழும் ஏனைய மத உள்ளூர்வாசிகளின் கவனத்திற்கு இந்த விடயம் வராவிட்டாலும் இலங்கைக்கு சமிபத்தில் வந்திருந்த ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் கவனத்துக்கு வந்துள்ளது.
அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்த ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை இங்கு பெளத்த கொடி பறக்கும் விடயம் சம்பந்தமாக நல்லிணக்கம் மற்றும் அனத்து இனங்களையும் ஒன்றிணைத்தல் தொடர்பான கூட்டம் ஒன்றில் கேள்வி எழுப்பியதாகத் தெரியவருகின்றது. இது தொடர்பில் பதிலளித்திருக்கும் அவரது அலுவலக ஊடகத் தொடர்பாளர் ரூபர்ட் கால்விஸ் இந்தக் கொடி விவகாரத்தை நவநீதன்பிள்ளை விவாதித்ததாகக் கூறியுள்ளார்.
இலங்கை காலனிய நாடாக இருந்து விடுதலை பெற்றதைக் கொண்டாடும் இந்த தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் ஒரு மதத்தின் கொடி மட்டும் பறக்க விடப்படுவது பொருத்தமானதா? என்று மனித உரிமைகள் ஆணையாளர் கேட்டார். ஏனைய மதங்களைப் பின்பற்றுவோர் இதை மற்றவர்களின் உணர்வுகளை பொருட்படுத்தாத ஒரு செயலாகப் பார்க்கலாம். என்றும் அவர் கூறியுள்ளார்.
இதற்கு மாறாக இலங்கை அரசு இந்த சுதந்திர சதுக்கத்தில் தேசியக் கொடியைப் பறக்கவிடுவதைப் பற்றி பரிசீலிக்கலாம். தேசியக் கொடி அனைத்து இலங்கையர்களுக்கும் அவர்கள் யார்? எந்த மதத்தைச் சேர்ந்தவர் என்பதையும் மீறி அது எல்லோருக்கும் சொந்தமானது. அனைவரையும் ஒன்றுபடுத்தும் ஒரு கொடி. என்று இது குறித்து ஆலோசனை வழங்கினார். என்றும் அவரின் ஊடகத் தொடர்பாளர் மேலும் தெரிவித்துள்ளார். இம் மதக் கொடி இங்கு பறக்க விடப்பட்டிருக்கும் நிலையில் இது விடயத்தையும் நினைவுபடுத்து வேண்டியுள்ளது.
ரொறிங்டனிலுள்ள சுதந்திர சதுக்கத்தில் இலங்கையில் பிறந்த ஒவ்வொரு மகனும் " நான் ஒரு இலங்கையன் " என்ற உணர்வு எழும் தேசிய முக்கியத்துவம் பெற்ற இடத்தில் தேசியக் கொடி பறக்க விடுவதற்குப் பதிலாகப் பெளத்த மதக் கொடி பறக்கவிடப்பட்டிருப்பதக் காணலாம்.




Post a Comment