Header Ads



முஸ்லிம்களுக்காக அரசாங்கம் பல அர்ப்பணிப்புக்களை மேற்கொண்டது - மகிந்த ராஜபக்ஸ

(Sfm) நாட்டை பிரிப்பதற்கு யாருக்கும் இடமளிக்கப் போவதில்லை என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ மீண்டும் வலியுறுத்தியுள்ளார். குளியாப்பிட்டியவிலன் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றின் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

வடக்கில் சில கட்சிகள் தமது தேர்தல் பிரசாரத்தில் நாட்டை பிரிக்கும் நடவக்கையை கொண்டுள்ளது. நாடடை இரண்டாக பிரிக்க மீண்டும் நாங்கள் இடம் தரப்போவதில்லை. நாங்கள் அனைத்தையும் நன்று அறிந்தே செயற்படுகிறோம். பிரபாகரன் குறித்தும் அறிந்திருந்தோம் ஏனையவர்கள் குறித்தும் அறிந்திருந்தோம்.

இதனிடையே ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் மற்றுமொரு மக்கள் சந்திப்பு புத்தளம் நகர மண்டபத்தில் இடம்பெற்றது.

இதன்போது, நாட்டில் சிறுபான்மையினத்தவர் இல்லை என்று ஜனாதிபதி குறிப்பிட்டார். அத்துடன் முஸ்லிம் இனத்தவருக்காக அரசாங்கம் பல அர்ப்பணிப்புக்களை மேற்கொண்டதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தெரிவித்தார்.

1 comment:

  1. Yes you are right several Mosques were damaged by your secrifies.

    ReplyDelete

Powered by Blogger.