சவுதி அரேபியாவில் 2 வயது குழந்தைக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை
கேஸ்ட்ரிக் பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட, உலகின் முதல் குழந்தை என்ற பெருமையை, சவுதி அரேபியாவைச் சேர்ந்த, 2 வயது சிறுவன் பெற்றுள்ளான்.
இந்தக் குழந்தை பிறந்த போது, சாதாரணமாக பிற குழந்தைகள் போல், 3 கிலோ எடை இருந்துள்ளது. அதற்குப் பின், இக்குழந்தையின் உடல் எடை, அபரிமிதமாக உயர்ந்துள்ளது. 14 மாதங்களில், 21 கிலோ எடையை அடைந்துள்ளது. அதற்குப் பிறகும், எடை தொடர்ந்து அதிகரிக்கவே, பல்வேறு உடல் நலக்குறைபாடுகள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக, அந்தக் குழந்தைக்கு தூங்க முடியவில்லை; தூங்கினால், மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது. இதனால், அந்தக் குழந்தையின் உடலில் அபரிமிதமாக சேர்ந்த கொழுப்பை அகற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது.
இதற்கான அதிநவீன சிகிச்சையை, இவ்வளவு வயது குறைந்த குழந்தைக்கு, இதற்கு முன், உலகில் எங்குமே மேற்கொள்ளப்படவில்லை. அதையடுத்து, அநதக் குழந்தைக்கு, சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் உள்ள, சுல்தான் ராணுவ மருத்துவ நகர மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சிகிச்சைக்குப் பின், அந்தக் குழந்தையின் உடல் எடை குறைந்துள்ளது.

Post a Comment