Header Ads



கிரண்ட்பாஸ் பள்ளிவாசல் தாக்குதல் - முஸ்லிம் அரசியல்வாதிகள் அடிமைகளாக்கப்பட்டுள்ளனர்

கொழும்பு, கிராண்ட்பாஸ் மசூதி மீதான தாக்குதல் தொடர்பில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தனது வன்மையான கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,

தற்போது முஸ்ஸிம் மக்களுக்கு எதிரான மத ரீதியில் துன்புறுத்தல்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது. கடந்த காலங்களில் தமிழ் மக்கள் மீது அரசின் ஒடுக்குமுறைகள் அதிகரித்து காணப்பட்டது.

தமிழ் தேசியக்கூட்டமைப்பு தமிழ் மக்களின் பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கத்துடன் தொடர்ந்தும் போராடி தற்போது சர்வதேச சமூகத்தின் கவனத்திற்கு இலங்கை தமிழ் மக்களின் நிலைப்பாட்டை எடுத்துச் சென்றுள்ளோம்.

இந்த நிலையில் முஸ்ஸிம் மக்களை அடக்கி ஒடுக்கும் தீவிரவாத செயல் தற்போது அதிகரித்துள்ளது. முஸ்ஸிம் மக்களின் வணக்கஸ்தளங்கள் மீது தாக்குதல் நடத்துதல், முஸ்ஸிம் பெண்கள் ‘அபாயா’ அணிவதை தடை செய்தல் போன்ற செயற்பாடுகளுக்கு குறித்த பேரினவாத சக்திகள் துணை போகின்றது.

அரசில் முஸ்ஸிம் அமைச்சர்கள் பலர் இருந்தும் இந்த பேரினவாத சக்திகளுக்கு எதிராக செயற்பட முடியாத அரசியல் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இன்றைய கால கட்டத்தில் தமிழ், முஸ்ஸிம் மக்கள் ஒற்றுமையுடன் செயற்படும் தருணமாக அமைந்துள்ளது. தமிழ் முஸ்ஸிம் மக்களை அடிமைகளாக்கி சிங்கள பேரினவாதம் தலை தூக்க எத்தனிக்கின்றது.

இதன் ஒரு அங்கமாகவே கொழும்பு, கிராண்ட்பாஸ் மசூதி மீதான தாக்குதல் அமைந்துள்ளது.

எனவே அரசாங்கத்துடன் அங்கம் வகிக்கின்ற பல முஸ்ஸிம் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் இருக்கின்ற போதும் இந்த சம்பவத்திற்கு எதிராக செயற்பட முடியாதவாறு அடிமைகளாக்கப்பட்டுள்ளனர்.

எனவே இந்த இனவாத, மதவாத செயற்படுகளுக்கு எதிராக தமிழ் தேசியக்கூட்டமைப்பு தமது வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதோடு தமிழ், முஸ்ஸிம் மக்கள் அடக்கப்படுவதற்கு எதிராக அனைத்து மக்களையும் ஒன்று திரட்டி எமது எதிர்ப்பை வெளிப்படுத்துவோம். என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

4 comments:

  1. முஸ்லிம் அரசியல் தலைவர்கள் ஒன்று சேர்ந்துதான் கண்டித்திருக்கிறார்கள் . தனித் தனி கட்சியாக கண்டனம் தெரிவிப்பதற்கு பயபடுகிறார்கள் . அவர்களும் பிழைக்கத்தானே வேண்டும்

    ReplyDelete
  2. kathankudieil pulihalin payangarawaatham nadantha poathu neengal thuukkama? mathawathigal ellasamuhathilum erukkirarhal.ippoluthu bowtharhalin kaattil malaipeiheradu.idarkaha anniya naaduhalukku oadi engal peratchinaihalai perthakka maattoam bowtharhal perumbalanoar nallawarhal tamilarhalum thaan.onru pattal undu waalvu.athikarathil ulla arasiyalwathihal ulungaha erunthal entha piratchinayum illai namakku.

    ReplyDelete

Powered by Blogger.