Header Ads



போமலின் இரசாயனம் பாவிக்கப்பட்ட மீன்களை கொசு (ஈ) மொய்க்காது..!

(யு.எல்.எம். றியாஸ்)

மனிதனின் அன்றாட வாழ்வில் உணவு மிக முக்கிய பங்கை வகிக்கின்றது அந்த வகையில் இன்று மக்களுக்கு சிறந்த சுகாதாரமான உணவுகள் கிடைக்கின்றதா என்றால் அது கேள்விக்குறியாகவே உள்ளது. இன்று எம்மத்தியில் உணவுப்பழக்க வழக்கங்களை எடுத்துப் பாரத்தால் பெரும்பாலான உணவுகள் இரசாயனப்பதார்தம்கள் கலந்த உணவுகளையே நாம் எமது அன்றாட வாழ்வில் உணவாக உட்கொண்டு வருகின்றோம் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.

அந்தவகையில் பெரும்பாலானவர்களினால் விரும்பி உண்ணப்படும் உணவு வகைகளில் மீனின் பங்கு மிக முக்கியமானது குறிப்பாக சொல்லப்போனால் மீன் சாப்பிடாதவர்கள் இல்லை என்றே சொல்லலாம் அந்த அளவிற்கு மீனின் முக்கியத்துவம் காணப்படுகின்றது.

ஆனால் இன்றைய காலகட்டத்தில்  சுகாதாரமான , சிறந்த    மீன்களை மீன் சந்தைகளில் காண்பது மிகவும் அரிதாகவே காணப்படுகின்றது இன்று சந்தைக்கு வருகின்ற பெரிய வகை மீன்கள் பெரும்பாலானவை போமலின் எனும் இரசாயனப்பதார்தம் சேர்க்கப்பட்டே சந்தைக்கு விற்பனைக்கு வருகின்றதை மீன் சந்திகளில் தாரளமாக காணக்கூடியதாக உள்ளது.

இந்த போமலின் எனும் இரசாயனப் பதார்தமானது பிரேத அறையில் உள்ள பிரேதங்கள் மிக நீண்ட நாட்களுக்கு கெட்டுப்போகாமல் இருக்க பாவிக்கப்படும் ஒரு இரசாயன பதார்த்தமாகும்.

இந்த போமலின் இரசாயனமானது மனிதனுக்கு  பல்வேறுபட்ட தீங்குகளை எற்படுத்தக்கூடியதொன்ராக காணப்படுகிறது அது எந்த அளவுக்கு மனிதனின்
உடலில் தாக்கம் செலுத்துகின்றது என்றால் போமலின் இரசாயனம் சேர்க்கப்பட்ட மீனை சாப்பிட்டவரக்ளின் உடம்பில் உள்ள  தோல் உரிந்துவிடும்  அளவிற்கு அதன் தாக்கம் காணப்படுகின்றது. அது மட்டுமல்லாது  சாப்பிட்டவுடன் வாந்தி வருதல், உணவு நன்ஜாகுதல் உள்ளிட்ட பல்வேறு பக்க விளைவிகளை ஏற்படுத்தக்கூடிய மனித உடம்புக்கு ஒவ்வாத  ஒரு இரசாயனப் பதார்த்தமே இந்த போமலின் ஆகும்.

போமலின் இரசாயனம் பாவிக்கப்பட்ட மீன்களை அடையாளம்  காண்பதற்கு சில வழிமுறைகள் இருக்கின்றது.

01.  போமலின் இரசாயனம் பாவிக்கப்பட்ட மீன்களை கொசு (ஈ) மொய்க்காது
02. மீனின் கண்கள் கலங்கி சிவப்பு நிறமாக காணப்படும்.
03. பழைய மீனாக இருக்கும் ஆனால் புதிய மீனைப்போல் அதன் உடல் பளபளப்பாக
காட்சி தரும்.
04. சமைத்த உடன் சமையல் பாத்திரத்தின் மேல் ஒரு வகையான என்னைப்படலம் மிதக்கும்.
05. சாப்பிடும் போது  எரிபொருளின் வாசனை போன்று வாசம் உணரப்படும்.
06.சாப்பிடும் போது மீனின் சுவை மாறி  ஒரு வகையான சுவையுடன்
விருவிருப்பு  (வாய் திமித்து ) தன்மை காணப்படும்.

ஆகவே இன்றில் இருந்தாவது நாம் சந்தைக்கு மீன் வாங்கச்செல்லும் போது மேற்குறிப்பிட்ட விடயங்களில்  கவனம் செலுத்தி நமக்கும் நமது சந்ததிக்கும்
சிறந்த மீன்களை வாங்கி உண்ணக்கொடுக்க உறுதி பூணுவோம் இதேவளை இவ்வாறான மீன்களை சந்தைக்கு கொண்டு வந்து விற்பனை செய்யும் மீனவர்களுக்கு சம்மந்தப்பட்ட தரப்பினர் முறையான சட்ட நடவடிக்கை எடுத்து அதை தடுத்து நிறுத்த தவறும் பட்சத்தில் நாம் எல்லோரும் பிரேத அறையில் வைக்கப்படும் போமலின் இரசாயனம் சேர்க்கப்பட்ட பிரேதங்களாக ஆகுவதில் ஐயமில்லை ?

No comments

Powered by Blogger.