Header Ads



'எமது சமூகத்தின் மூச்சுக்காற்றை இல்லாமல் செய்ய சிங்கள கடும் போக்காளர்கள் முனைப்பு'

எமது சமூகத்தின் மூச்சுக்காற்றை இல்லாமல் செய்ய சிங்கள கடும் போக்காளர்கள் முனைப்புடன் உள்ள வேளையில் - முஸ்லிம்களாகிய நாம் வேற்றுமையில் ஒற்றுமை கண்டு சமூகத்தை பாதுகாக்க அணி திரள வேண்டும். அமைச்சுப் பதவிகளுக்காகவும், கிடைக்கலாம் என எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் அரை மந்திரிப் பதவிகளுக்காகவும் - நமது உரிமைகளைக் காவு கொடுக்க முடியாது. எனவே, சமூகத்தைப் பாதுகாக்க வேண்டுமாயின் - அரசில் இருந்து முஸ்லிம் பிரதிநிதிகள் அனைவரும் உடனடியாக வெளியேற வேண்டும்.

இவ்வாறு, கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதிப் பொருளாளருமான கே.எம்.ஏ. ஜவாத் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

முஸ்லிம் சமூகத்துக்கெதிராக, சிங்களக்கடும் போக்காளர்கள் அண்மைக் காலமாக மேற்கொண்டு வரும் செயற்பாடுகள் மற்றும் கிராண்ட்பாஸ் பள்ளிவாசல் மீதான தாக்குதல் நடவடிக்கை போன்றவற்றினைக் கண்டித்தும், இவ்வாறான நிலையில் முஸ்லிம் அரசியல்வாதிகள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும் சுட்டிக்காட்டி – ஜவாத் விடுத்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்ட விடயங்களைத் தெரிவித்துள்ளார்.  குறித்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில்;

முஸ்லிம்கள் மீது கட்டவிழ்கக்பட்டுள்ள இனவாதத் தாக்குதல்கள் அனைத்தும் உடனடியாக நிறுத்தப்படுதல் வேண்டும். இல்லையென்றால், 'ஜிஹாத்' எனும் மார்க்கத்திற்கான அர்ப்பணிப்பை முஸ்லிம் அரசியல் தலைவர்களும் உலமாக்களும் பிரகடனப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்படும். 

ஜிஹாத் என்றால் - வாளை எடுத்து யுத்தம் செய்வது, அந்நியர்களை அழிப்பது என்று அர்த்தம் கொள்ளக் கூடாது. தனது சுதந்திரங்கள் பறிக்கப்படும்போது, தன்னையும் தன் சமூகத்தையும் பாதுகாப்பதற்காகவும், தற்காத்துக் கொள்வதற்காகவும் - அந்தந்த தருணத்திற்கேற்ப தம்மை அர்ப்பணித்தலே ஜிஹாத் ஆகும். 

அந்த அடிப்படையில் இந்த நாட்டில் முஸ்லிம்களின் உரிமைகள் பறிக்கப்பட்டு வருகின்றன. ஜனநாயக நாடொன்றிலே - தனது நம்பிக்கைக்கேற்ப இறைவனை வணங்கவும், உணவு, உடை போன்றவற்றினை சுதந்திரமாக தேர்வு செய்யவும், தான் வசிக்கும் இடத்தில் பாதுகாப்புக்குப் பங்கமின்றி வாழவும் அனைவருக்கும் உரித்துக்கள் உள்ளன. 

ஆனால், இவை எம்மிடம் இருந்து படிப்படியாக இன்றை சூழ்நிலையில் பறிபோய்க் கொண்டிருக்கின்றன. எனவே, எம்மைத் தற்காத்து கொள்ளும் தருணம் ஏற்பட்டுள்ளது.

சிலவேளைகளில், மௌனமாக இருப்பதுகூட ஜிஹாத் ஆக அமைந்து விடுகிறது. ஆனால், அப்படி இருப்பதற்கான தருணம் இதுவல்ல. இன்றைய நிலையில் ஒவ்வொரு முஸ்லிமும் மனம் வெதும்பி, கொதித்துப் போய்க் கொண்டிருக்கும் நிலையில், முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகள் மௌமாக இருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.

தங்களுடைய அமைச்சுப் பதவிகளுக்காகவும், கிடைக்கலாம் என எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் அரை மந்திரிப் பதவிகளுக்காகவும் - நமது உரிமைகளைக் காவு கொடுக்க முடியாது. எனவே, சமூகத்தைப் பாதுகாக்க வேண்டுமாயின் - அரசில் இருந்து முஸ்லிம் பிரதிநிதிகள் அனைவரும் உடனடியாக வெளியேற வேண்டும்.

கிழக்கு மாகாணசபையில் ஆட்சியமைக்கப்பட்டபோது, தனக்குக் கிடைக்க வேண்டிய முஸ்லிம் முதலமைச்சரை மு.காங்கிரசின் தலைமை விட்டுக் கொடுத்து, அரசுடன் இணைந்தது. கிழக்கின் ஆட்சி திடீரென கலைந்து விடக்கூடாது என்பதற்காகவும், கட்சி மீண்டும் ஒரு தடவை பிளவுபட்டு விடக்கூடாது என்பதற்காகவும் - கிழக்கில் அரசோடு இணையும் தீர்மானம் எட்டப்பட்டது. 

கிழக்கு மாகாணசபையில், அரசுக்கு முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவு வழங்குவதற்குப் பிரதியுபகாரமாக - கல்முனை கரையோர மாவட்டத்தை வழங்குவதாகவம், அதன் முதற்கட்டமாக, கரையோரத்திற்கான அரசாங்க அதிபர் காரியாலயமொன்றினை தென்கிழக்கின் தலைநகரான கல்முனையில் நிறுவித் தருவதாகவும் வாக்களிக்கப் பட்டது. ஆனால், அவை எதும் நிறைவேற்றப்படவில்லை. நமது முஸ்லிம் மக்களின் பிரதிநிகள் அபிவிருத்தி - அபிவிருத்தி என்று அலைந்து திரிவதையே காண முடிகின்றது.

'அதிகாரத்தை நாம் நிறுவிக் கொண்டால், அபிவிருத்தி என்பது நமது காலடியில் தவம் கிடக்கும்' என்று மறைந்த மாமனிதர் எம்.எச்.எம். அஷ்ரப் கூறியதை இங்கு நினைவூட்ட விரும்புகின்றேன். இதற்கொப்ப, வடக்கில் தனது அதிகாரத்தினை நிறுவிக் கொள்வதற்காக - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அர்ப்பணிப்போடு இயங்குகின்றமையினை இங்கு சுட்டிக்காட்டவும் விரும்புகின்றேன்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமைத்துவம் மிக நீண்ட காலத்துக்குப் பிறகு 'தனித்து நின்று உரிமை காத்தல்' என்கிற தீர்மானத்தினை 'சரியான நேரத்தில் சரியான முடிவாக' எடுத்திருக்கின்றது. அவ்வாறே - மண்டியிடாமல் யாவரும் மானம் காக்கவும் தயாராக வேண்டும்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆட்சியில் 1976 ஆம் ஆண்டு - புத்தளம் பள்ளிவாசலில் ராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட படுகொலை நினைவுக்கு வருகிறது. அந்த கொடூரத்துக்கு எதிராகக் குரல் கொடுப்பதற்கு – அன்று, முஸ்லிம் தரப்பில் எவரும் இருக்கவில்லை. முஸ்லிம் சமூகம் அரசியல் அநாதையாக இருந்தது. அதன்போது, முஸ்லிம்களுக்கான ஒரு அரசியல் கட்சியின் தேவையும் உணரப்பட்டது. அதன் தொடர்ச்சியாகவே பின்னர் மு.காங்கிரஸ் உருவாக்கப்பட்டது. 

இப்போதும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆட்சியில்தான்  கிராண்ட்பாஸ் பள்ளிவாசல் தாக்கப்பட்டுள்ளது. ஆனால், இன்று மு.காங்கிரஸ் உட்பட முஸ்லிம் தரப்பில் நிறையவே அரசியல் கட்சிகள் உள்ளன. நிறையவே முஸ்லிம் அமைச்சர்களும் உள்ளனர். ஆனாலும், இந்தத் தாக்குதலுக்கு எதிராக, காத்திரமான குரல்கள் இதுவரை ஒலிக்கவேயில்லை. இது மிகவும் விசனத்துக்குரிய விடயமாகும். எனவே, எமது சமூகத்தின் மூச்சுக்காற்றை இல்லாமல் செய்ய சிங்கள கடும் போக்காளர்கள் முனைப்புடன் உள்ள வேளையில் - முஸ்லிம்களாகிய நாம் வேற்றுமையில் ஒற்றுமை கண்டு சமூகத்தை பாதுகாக்க அணி திரள வேண்டிய காலம் இதுவாகும் என்று தெரிவித்துள்ளார்.

4 comments:

  1. முஸ்லீம்கள் விளிப்புடன் இருக்க வேண்டிய காலம் இது. காபீர்கள் ஓரணியில் ஒன்று பட்டு விட்டார்கள். நாம் கோடாரிக் கம்புகலாக இருக்காமல் முஸ்லீம்கள் அனைவரும் சகோதரர்கள் என்ற அடிப்படையில் ஒன்று பட வேண்டும்.
    முஸ்லீம்கள் தமக்குள்ளே சண்டையிட்டு மன்டியிட்டு வாக்குகளை அள்ளி அள்ளிப் போட்ட காபீர் அமைச்சர்களும், காபீர் அரசும் காபீர்களுக்கெ நேரடியாகவும் மறைமுகமாகவும் துணை போகின்றன. முஸ்லீம்கள் தம் வாக்குகளை காபீர்களுக்கு போடுவது ஹராம்..ஹராம்..!!

    இவ்வளவு நடந்தும் எம் மக்களுக்கு விளங்க வில்லையென்றால்,,காபீர்களை நம்புவார்கள் என்றால் எமக்குல் ஒற்றுமை எற்படவில்லையென்றால்,,
    உண்மையிலே நாம் சொரனை கெட்ட சோனகர்கள் தாம்..!

    ReplyDelete
  2. எமது உளக்குமுறலை தங்கள் கருத்து பிரதிபலிக்கின்றது. எமது சமூகத்திற்காக ஜிஹாத் செய்ய நாங்கள் தயார் எங்களை வழி நடாத்த யாரேனும் தலைவன் உண்டோ? தூர நோக்குச்சிந்தனை, சாதூர்யமான அனுகு முறை எனும் காலாவதியான கதைகளை கூறிக்கொண்டு தங்களது இருப்பை உறுதிப்படுத்திக்கொள்ளும் தலைமத்துவம் எமக்கு தேவையேயில்லை.

    ReplyDelete
  3. எமது உளக்குமுறலை தங்கள் கருத்து பிரதிபலிக்கின்றது. எமது சமூகத்திற்காக ஜிஹாத் செய்ய நாங்கள் தயார் எங்களை வழி நடாத்த யாரேனும் தலைவன் உண்டோ? தூர நோக்குச்சிந்தனை, சாதூர்யமான அனுகு முறை எனும் காலாவதியான கதைகளை கூறிக்கொண்டு தங்களது இருப்பை உறுதிப்படுத்திக்கொள்ளும் தலைமத்துவம் எமக்கு தேவையேயில்லை.

    ReplyDelete
  4. அடுத்த எலக்சனுக்கு வாக்கு வாங்குவதற்கு கதை சொல்ல தேவை இல்லை. முதல்ல உக்களுக்கும் உங்கட கட்சிக்கும் போட்ட வோட்டுக்கு எதையாவது ஒரு உரிமையை பெற்று தரப் பாருங்கள். இப்போ வடக்கு தேர்தலுக்கு வாக்கு பெருவதக்கு ஒற்றுமை பற்றி சொல்றிங்க. கிழக்கு தேர்தலில் சாதித்தது வெற்றிலைக்கு எதிரான வாக்குகளை பெற்று அதை அவைகளிடமே அடமானம் வைத்தது'. இல்ல என்று கூற முடிமா?? எம்போன்றவர்கள் வாக்களித்தது யாருக்காக..... கடைசியில் கூறுவது அரசியல் சாணக்கியமான முடிவு.. அப்ப வோட்டு போட்டவர்கள் சாணக்கியம் தெரியாத கேணயர்களா???? முதலில் ஏசுவதும் பின்னர் அவர்களிடமே சேர்ந்துகொண்டு உறவாடுவது.. பின்னர் தேர்தல் வந்தால் வாக்கை மீறிவிட்டார்கள் என்று சொல்வது....உங்களுக்கு போடும் வாக்கு மீண்டும் அவர்களுக்கு போகாது என்பதற்கு என்ன உத்தரவாதம்...

    ReplyDelete

Powered by Blogger.