Header Ads



எகிப்து இராணுவத்திற்கு எதிராக யூசுப் அல் கர்ளாவி..!

அமைதியான முறையில் போராட்டம் நடத்துவோரை கொலை செய்வதை இஸ்லாம் தடை செய்துள்ளது என்று உலக முஸ்லிம் மார்க்க அறிஞர்கள் கூட்டமைப்பின் தலைவரான டாக்டர் யூசுஃப் அல் கர்ழாவி மார்க்க தீர்ப்பை (ஃபத்வா) வெளியிட்டுள்ளார்.
எகிப்தில் நடந்த ராணுவப் புரட்சி மற்றும் ஆயிரக்கணக்கான மக்களை எகிப்தின் காட்டுமிராண்டி ராணுவம் படுகொலை செய்வது குறித்து வினவப்பட்ட ஒரு கேள்விக்கு பதில் அளிக்கையில் யூசுஃப் அல் கர்ழாவி அளித்த பதில்: “நாட்டின் ஸ்திரத்தன்மையை பாதுகாக்க ராணுவம் இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுவதில் இருந்து விலக வேண்டும். நாட்டின் பாதுகாப்பு அமைச்சகமும், உள்துறை அமைச்சகமும் மக்களுக்காக பணியாற்றவேண்டும். நிரபராதிகளையும், அமைதியான முறையில் போராட்டம் நடத்துபவர்களையும் கொன்றொழிப்பது ராணுவப் பணிக்கு உகந்தது அல்ல. இத்தகையதொரு சூழலில் ராணுவத்தினரும், போலீஸ் அதிகாரிகளும் தங்களது பணியை ராஜினாமா செய்ய வேண்டும்.
மக்களுக்கு எதிராக எவ்வித காரணமும் இல்லாமல் வார்த்தையாலோ, செயல்களாலோ ஏதேனும் வகையிலான அக்கிரமங்களை அல்லாஹ்வும், அவனது தூதரும் தடை செய்துள்ளார்கள். மார்க்கச் சட்டங்களுக்கும், இறைவனது கட்டளைகளுக்கும் மாற்றமான காரியங்களை செய்வது மார்க்க நம்பிக்கையை கேலி செய்வதாகும். இது ஈருலக வாழ்க்கையை நஷ்டத்திலாக்கும்  என்று யூசுஃப் அல் கர்ழாவி கூறியுள்ளார்.

3 comments:

  1. நீங்கள் எது கூறினாலும் முஸ்லிம் இரு முக்கிய புனித தளங்களின் பாதுகாவலராக உள்ள நாட்டின் தலைவரும் குவைத், ஜோர்டான், UAE போன்ற நாட்டின் மன்னர்களின் நிதி உதவியும் எகூதி நாசரணிகளின் எகிப்து இராணுவத்துக்கான ஆதரவும் எகிப்து இஹ்வான்களின் போராட்டதில் மிகுந்த அழிவுகளையே உருவாக்கும்.

    ReplyDelete
  2. Ulaha aringarhalin thalaivar?. eppozu therivaanar?

    ReplyDelete
  3. இஸ்லாம் ஜனநாய ஆட்சியைத்தான் அனுமதிக்கின்றது. ஆகையால் மன்னர் ஆட்சிகளை முடிவுக்கு கொண்டுவர சகலரும் முயற்சிக்க வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.