பெண் புகைப்பட நிருபர் மீது பாலியல் வல்லுறவு
மும்பையில் 22வயது பெண் போட்டோகிராபர் 5 பேர் கொண்ட கும்பலால் கற்பழிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தற்போது மும்பையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக 5 பேர் வரைபடம் வெளியிட்டு தேடி வருகிறது. இந்த கற்பழிப்பு சம்பவம் இன்று பார்லி.,யில் எதிரொலித்தது. சபாநாயகர் மீராகுமார் கடும் கண்டனம் தெரிவித்தார். மத்திய உள்துறை அமைச்சகம் மும்பை போலீசாரிடம் முழு விவர அறிக்கை கேட்டுள்ளனர்.
நேற்று இரவு 8 மணியளவில் தெற்கு மும்பை மகாலெட்சுமி மில் பகுதியில் பெண் போட்டோகிராபர் 5 பேர் கொண்ட கும்பலால் கற்பழிக்கப்பட்டுள்ளார், 20 முதல் 25 வயதுக்குட்பட்டவர்கள் ஈடுபட்டதாக தெரியவந்துள்ளது. அதில் 2 பேர் முழு போதையில் இருந்ததாகவும், சிலர் சிகரெட் குடித்தபடி வந்ததாகவும் தெரிகிறது. இக்கும்பல் அப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து, அவரை ரயில் தண்டவாளம் அருகே போட்டு விட்டு தப்பியது.
நண்பர்கள் அதிர்ச்சி:சம்பவம் குறித்து அறிந்த பெண் நண்பர்கள் அதிர்ச்சியடைந்தனர்.பின்னர் அப்பெண் குடும்பத்திற்கு தகவல் தெரிவித்து என்எம் ஜோஷி மார்க் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.போலீஸ் அதிகாரிகள் புகார் பதிவு செய்து மருத்துவ பரிசோதனைக்காக ஜஸ்லோக் மருத்துவமனையில் அப்பெண்ணை சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் தொடர்பாக இதுவரை 20 முதல் 25 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.
கூடுதல் கமிஷனர் பிரவீண் சாலங்கே கூறுகையில்,நான் சம்பவம் நடந்த இடத்திற்கு சென்று ஆய்வு நடத்தினேன். மேலும் துணை கமிஷனர் விநாயக் தேஷ்முக்கிடம் கூறி மேலும் ஆய்வு நடத்த கூறியுள்ளேன்.குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவர் என நம்பிக்கை தெரிவித்தார். குற்றவாளிகள் 5 பேரின் வரைபடமும் தயார் செய்யப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
18 தனிப்படைகள் அமைப்பு
மும்பையில் பெண் புகைப்பட நிருபர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தில் இதுவரை 20-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடக்கிறது. இதில் 5 பேர் சம்பந்தப்பட்டிருப்பதால், அவர்கள் தலைமறைவாக உள்ளனர். அவர்களை பிடிக்க போலீசார் வரைபடம் வெளியிட்டு 18 தனிப்படைகள்அமைத்தனர். தொடர்ந்து இன்று மதியம் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், 4 பேர் அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும் மும்பை போலீஸ் வட்டாரம் தெரிவிக்கிறது.
ராஜ்யசபாவில் அமளி:
இந்நிலையில் இந்த விவகாரம் ராஜ்யசபாவில் கடும் அமளியை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் குறித்து விவாதிக்க எதிர்கட்சியினர் குரல் எழுப்பினர். சபாநாயகர் அனுமதி அளித்தார். பா.ஜ.,வை சேர்ந்த பெண் எம்.பி., ஸ்மிருதி இராணி பேசுகையில்: இது போன்று பெண்களுக்கு எதிரான குற்றம் தடுத்து நிறுத்தப்படுவது எப்போது ? எவ்வளவு நாள் தான் பொறுத்து கொள்வது ? பெண்கள் அளி்க்கும் புகாரில் 33 சதவீதமே எப். ஐ. ஆர்., ஆக பதிவு செய்யப்படுகிறது.
சிக்கியது எப்படி: மும்பை போலீஸ் கமிஷனர் பேட்டி
இது குறி்தது தெற்கு மும்பை போலீஸ் கமிஷனர் சத்யபால்சிங் கூறுகையில், நேற்று மாலை 6.30 மணியளவில் அந்த பெண் தனது ஆண் நண்பருடன் வந்துள்ளார். இதை கவனித்த 5 பேர் கொண்ட கும்பல், ஆண் நண்பரை தாக்கி , பெல்ட்டால், அவரது கைகளை கட்டினர். பின்னர் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு தப்பியோடிவிட்டனர்.சம்பவம் நடந்தபின்னர் 8.30 மணிக்குதான் போலீசாருக்கு தெரியவந்தது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பெண்ணிடம் , குற்றவாளிகளின் அடையாளங்களை கேட்டு அதன் பேரில், குற்றவாளிகளின் வரைபடத்தை தயார் செய்து காலை வெளியிட்டு விசாரணையை தீவிரப்படுத்தினோம். கைதான 5 பேரில் ஒருவர் குற்றவாளி என உறுதியாகியுள்ளது. இரண்டு பேர் ரவுடிகள் என தெரியவந்துள்ளது என்றார்.
.jpg)
Post a Comment