Header Ads



கோத்தபய ராஜபக்ஸவின் இப்தாரில் பங்கேற்ற ஒரேயொரு முஸ்லிம் அரசியல்வாதி

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபய ராஜபக்ஸ ஏற்பாடு செய்திருந்த இப்தார் நிகழ்வு இன்று வியாழக்கிழமை, 1 ஆம் திகதி கொழும்பில் நடைபெற்றது. இதில் பிரதியமைச்சர் பைஸர் முஸ்தபா பங்கேற்றுள்ளார். முஸ்லிம் அரசியல்வாதிகள் வரிசையில் கோத்தாவின் இப்தார் நிகழ்வில் பங்கேற்ற ஒரேயொரு முஸ்லிம் அரசியல்வாதி பைஸர் முஸ்தபா மாத்திரமேயாகும்.

நிகழ்வில் பங்கேற்ற முஸ்லிம் பிரதிநிதியொருவர் இதனை சற்றுமுன்னர் ஜப்னா முஸ்லிம் இணையத்திடம் கூறினார்.

ஏனைய முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லையா அல்லது அழைப்பு விடுக்கப்பட்டும் முஸ்லிம் அரசியல்வாதிகள் கோத்தாவின் இப்தாரில் பங்கேற்கவில்லையா என்பது தெரியாதபோதும், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஏற்பாடு செய்த இந்த இப்தார் நிகழ்வு ஒரு ஆரோக்கியமான விவகாரம் என மற்றுமொரு முஸ்லிம் பிரதிநிதி சுட்டிக்காட்டினார்.

10 comments:

  1. பாவம் அழைப்பு விடுக்கப்பட வில்லை. அழைப்பு விடுக்கப்பட்டிருந்தால் குடும்பத்துடன் சென்றிருப்பார்கள் நம்ம அரசியல் வாதிகள்.

    ReplyDelete
  2. சமூகத் துரோகி!

    -புவி எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-

    ReplyDelete
  3. This ifthar has been arranged to show his goodness for muslim community that he has no connection with BBS,Ravaya, Hele Urumaya and etc...

    ReplyDelete
  4. வேறு முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு அழைப்பு விடுக்கப் படவில்லை என்றுதான் கருத வேண்டியுள்ளது.

    இல்லாவிட்டால், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாயவின் அழைப்பை நிராகரிக்கும் அளவுக்கு தைரியம் உள்ள முஸ்லிம் அரசியல்வாதிகள் இந்த நாட்டில் இருக்கின்றார்கள் என்று நம்ப நீங்கள் தயாரா?

    ReplyDelete
  5. enn atuu aarokkiyamana vivaharam.ulahathhukku ottrumayayi kattawa.

    ReplyDelete
  6. INNUM IRANDU MOONTU NATKALIL EANGKAYAWATU MUSLIM NAATTITKU EAMATU MAANPU MIKU JANATIPATI "DARMA"YAATTIRAI PORATA IRUKKUM.ATTAKUTTAN INTA MUNNURAYYO?

    ReplyDelete
  7. Super comments

    ReplyDelete
  8. அஸ்வருக்குமா ஆப்பு! அப்போ காதர் எங்கே போனார்!

    ReplyDelete
  9. if they invit then better our muslim brothers going to join.We know they enemmy us but we wan´t to show them,we should show our humbles them.Anyway i am sorry for who reject the invitation.

    ReplyDelete
  10. கோத்தபய ராஜபக்ஸவின் இப்தாரில் பங்கேற்ற ஒரேயொரு வெக்கம் கெட்ட முஸ்லிம் அரசியல்வாதி....????

    ReplyDelete

Powered by Blogger.