Header Ads



நோன்பு கடமையாகாத 7 வயது சிறுவன் நோன்பு நோற்றிருந்தவேளையில் மரணம்

(ஓமானிலிருந்து உமர் அலி இஸ்மாயில்)

   ஓமான்,மஸ்கட் இல் இறைவனின் கட்டளையின் பால் அதிகம் ஈர்க்கப்பட்ட 7 வயது இளம் பாலகன் ஒருவன் நோன்பு நோற்று வந்திருக்கின்றான் ,  ழுஹர் தொழுகையின் பின்னர் தூங்கச்சென்ற இச்சிறுவன்  பெற்றோரால் கவனிக்கப்படவில்லை. பின்னேரத்தில் பிள்ளை சோர்வாய் இருப்பதைக் கவனித்த பெற்றோர் உடனடியாக ரோயல் வைத்தியசாலையின்   அவசர சிகிச்சை பிரிவிட்கு கொண்டு சென்றனர்.ஆனால் அந்த அப்பாவிச் சிறுவனது உயிர் வழியிலேயே பிரிந்துவிட்டது   என்று வைத்தியசாலை வட்டாரத்தால் உறுதிசெய்யப்பட்டதும் பெற்றோர் கதறியழுதுள்ளனர்.

               கடந்த திங்கட்கிழமை பிற்பகலில் நடந்த இந்த  மனதை உருக்கும் துயரசம்பவத்தையிட்டு  பெற்றோர்களிற்கு  வைத்தியசாலை  விசேட வேண்டுகோளை விடுத்தது ,12 வயதுக்குட்பட்ட சிறுவர்களை நோன்பு நோற்பதற்க்கு பெற்றோர் அனுமதிக்காகக் கூடாது என்று அச்செய்தி குறிப்பிட்டது.

                  மேலும் இத்துயரச்சம்பவம் குறித்து மஸ்கட் , சீப்  பெரிய பள்ளிவாசலின் பிரதான இமாமான  சேய்க்  சாலிம் அல்  சறைகி (Seik Salim al Saraiki )  அவர்கள் கருத்துத்தெரிவிக்கையில், இஸ்லாம் பருவ வயதடந்தவர்களையே  நோன்பு நோற்கச் சொல்லியுள்ளது ,பெற்றோர்கள் வயது வராத நோன்பு கடைமையாகாத சிறுவர்களை அவர்களது உடல்,சௌக்கிய நிலையை கருத்தில் கொள்ளாது  நோன்பு நோர்க்கச்சொல்லுவது கண்டிக்கப்படவேண்டிய விடயமாகும்,அதிலும் 7 வயது என்பது பாதி நாள் கூட நோன்பு நோற்க முடியாத ஒரு வயதாகும் அத்துடன் புதிதாக நோன்பு நோக்கும் சிறார்கள் பெற்றோர்களால் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு அவர்கள் பசித்திருக்கும் நேரம் படிப்படியாகவே அதிகரிக்கப்பட வேண்டும் என்றும் கூறினார்.

மேற்படி சிறுவன் உடலில் அதிக நீரிழப்பு  (Dehydration) காரணமாகவே மரணமடைந்துள்ளான்  என்பது குறிப்பிடத்தக்கது.சிறுவர்களில் நீரிளப்பானது மிக விரைவில் உயிர்க்குறிய உறுப்புகளை (Vital Organ )பாதிப்படையச்செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.


8 comments:

  1. innalillahi wa inna ilaihi raajioon...... :(

    ReplyDelete
  2. إنا لله وإنا إليه راجعون

    ReplyDelete
  3. Inalillahi wahinna elaihi rajiuon.

    ReplyDelete
  4. inna lillahi vainna ilaihi rajiun

    ReplyDelete
  5. Inna lillahi wa inna ilaihi raajioon..

    ReplyDelete
  6. May Allah grant him jennathul firdouse

    ReplyDelete
  7. may Allah bless upon him

    ReplyDelete
  8. May Allah bless upon him.

    ReplyDelete

Powered by Blogger.