Header Ads



காத்தான்குடியில் நாளை புதன்கிழமை நடமாடும் சேவை

(பழுளுல்லாஹ் பர்ஹான்)

மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவிட்குட்பட்ட பகுதிகளுக்கான ஆட்பதிவுத் திணைக்கள அடையாள அட்டை பெறுவதற்கான நடமாடும் சேவை நாளை புதன்கிழமை காத்தான்குடி பிரதேச செயலகத்தில் நடைபெறவுள்ளதாக காத்தான்குடி பிரதேச செயலாளர் எஸ்.எச்.எம்.முஸம்மில் தெரிவித்தார்.

காலை 09.00மணி தொடக்கம் பிற்பகல் 04.00மணி வரை இடம்பெறவுள்ள குறித்த நடமாடும் சேவையில் புதிய தேசிய அடையாள அட்டைகள் விண்ணப்பம்,காணாமல் போன தேசிய அடையாள அட்டைகள் விண்ணப்பம்,அழிந்து போன அடையாள அட்டைகளை புதுப்பித்தல் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை பெற்றுக் கொள்ள முடியுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

குறித்த நடமாடும் சேவையில் காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவிட்குட்பட்ட பகுதிகளில் உள்ள மக்கள் பயன்பெறுமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்த நடமாடும் சேவையில் காணாமல் போன தேசிய அடையாள அட்டைகள் விண்ணப்பத்திற்காக பொலிஸ் முறைப்பாடு,புகைப்படம் எடுத்தல் என்வற்றிற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.